கடலில் மூழ்கிய கண்டத்தின் ஆய்வு

கடலில் மூழ்கிய கண்டத்தின் ஆய்வு
Updated on
1 min read

மும்பை நகரிலிருந்து வெளிவந்த தமிழ் இதழான தமிழ் (இ) லெமுரியாவில் சுமார் இரண்டரை ஆண்டுகளாக வெளியானது ‘தொலைந்த கண்டத்தின் தொன்மைக் கதை’ என்னும் தொடர். இந்தத் தொடருடன் வேறு பல நல்ல தகவல்களையும் சேர்த்து லெமுரியா-குமரிக்கண்டம் என்னும் இந்நூலை உருவாக்கியுள்ளனர்.

மானிட இனத்தின் தொட்டிலாகத் திகழ்ந்த குமரிக் கண்டம்தான் லெமுரியா என்னும் ஆராய்ச்சித் தகவல் தமிழர்களை மகிழ்ச்சிப்படுத்தியது. ஆகவே லெமுரியா பற்றிய ஆய்வு என்பது நமது முன்னோரைப் பற்றியும் அவர்தம் வாழ்க்கை பற்றியுமான ஆய்வு.

ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளியான 21 நூல்களின் துணையுடன் உருவாகியுள்ள இந்நூலில் உலக அறிஞர்கள் ஐம்பது பேரின் மேற்கோள்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. லெமுர்கள், லெமுரியா போன்றவற்றின் சரித்திரமும் தொன்மையும் இதில் விளக்கப் பட்டுள்ளன.

லெமுரியா கண்டத்தின் ஆய்வை இச்சிறு நூலில் அடக்கிவிடுதல் முடியாது என்பதை நூலாசிரியர்கள் உணர்ந்தே உள்ளனர். ஆனால் லெமுரியா கண்டத்தின் வரலாற்றையும் அதன் பெருமையையும் அறிந்து அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்பதே இந் நூலின் நோக்கமாக உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in