நூல் வரிசை: உலகை மாற்றி அமைப்போம்

நூல் வரிசை: உலகை மாற்றி அமைப்போம்
Updated on
3 min read

உலகை மாற்றி அமைப்போம்
சேலம் க.சுந்தரராஜன்
மலர்க்கண்ணன் பதிப்பகம்
விலை: ரூ.140
தொடர்புக்கு: 9884602541

சட்டம், வங்கி போன்ற சொற்களுக்குப் பின்னாலுள்ள பொருளை இந்த நூல் அத்தியாயம் அத்தியாயமாக விளக்குகிறது. அறிமுகக் கட்டுரைகளுக்கான எளிமையுடன் இவை எழுதப்பட்டுள்ளன.

தவத்தில் கிடைத்த வரங்கள்
இரா.புனிதன்
வள்ளலார் வழி பதிப்பகம்
விலை: ரூ.120
தொடர்புக்கு: 9840682682

ஓசை நயம் மிக்க கவிதைகள் இவை. விநாயகர், அம்மன் குறித்த கவிதைகளுடன் காமராஜர், வாஜ்பாய் போன்ற தலைவர்கள் பற்றிய கவிதைகளும் இடம்பெற்றுள்ளன.

பிறழ்வி
அன்புத்தோழி ஜெயஸ்ரீ
கடல் பதிப்பகம்
விலை: ரூ.160
தொடர்புக்கு: 8680844408

இயற்கை, வாழ்க்கைக் காட்சிகள், காதல், பிரச்சினைகள் எனப் பல பொருள்கள் கொண்ட கவிதைகளின் தொகுப்பு இது. எளிமையான மொழிதலில் தன் அனுபவங்களைக் கவிதையாக்க இவர் முயன்றுள்ளார்.

மகனுக்கு அப்பா என்றும் பெயர்
யா.சாம்ராஜ்
படி வெளியீடு
விலை: ரூ.100
தொடர்புக்கு: 9940446650

தன் மகன் குறித்த தந்தையின் வியப்புகள் இந்தக் கவிதைகள், கேள்விகள் கேட்டுக்கொண்டே இருக்கும் மகனைத் தந்தை பெரியார் என்கிறார் கவிஞர்.

மனிதனும் தெய்வமாகலாம்
வீர.உலகநாதன்
சாந்தா பப்ளிஷர்ஸ்
விலை: ரூ.150
தொடர்புக்கு: 9962388550

சித்தர்களுள் முதன்மையானவராகக் கருதப்படுபவர் திருமூலர். அவர் அருளிய திருமூலத்தை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்டுள்ள நூல் இது. ‘நான் யார்?’, ‘சாகாக் கலை எப்படி?’ என்பது போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது இந்நூல்.

கற்கை நன்றே
ராம்சுரேஷ்
எழுத்து பிரசுரம்
விலை: ரூ.230
தொடர்புக்கு: 8925061999

பணம் சம்பாதிப்பதற்கான ஒன்றாகக் கல்வி மாறிவிட்ட காலகட்டத்தில், கல்வி குறித்த உண்மையான பொருளைத் தேடுகிறது இந்த நாவல். ஓர் அனுபவத்தை முன்வைத்து நாவல் நகர்கிறது.

அமெரிக்கா
ஜெகாதா
நேஷனல் பப்ளிஷர்ஸ்
விலை: ரூ.450
தொடர்புக்கு: 044-2834 3385

அமெரிக்காவைப் பல பரிமாணங்களில் அலசும் நூல் இது. உலக நிகழ்வுகளில் அமெரிக்காவின் நிலைப்பாடு, உள்நாட்டு விஷயங்கள் எனப் பல அம்சங்கள் இதில் சொல்லப்பட்டுள்ளன.

பாதர் வெள்ளை
சு.சண்முகசுந்தரம்
காவ்யா பதிப்பகம்
விலை: ரூ.150
தொடர்புக்கு: 98404 80232

சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவராகக் கருதப்படும் வெள்ளையத்தேவனின் வரலாற்று நூல் இது. கும்மிப் பாட்டு போன்ற பண்பாட்டு வரலாற்றுப் பின்புலத்தில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.

செவ்வியல் இலக்கியங்கள் ஓர் அறிமுகம்
சு.குமணராசன்
தமிழ் அலை வெளியீடு
விலை: ரூ.250
தொடர்புக்கு: 77085 97419

தமிழ் மொழியின் தனித்துவத்துக்குக் காரணம், இம்மொழியில் எழுதப்பட்ட பழமையான செவ்விலக்கியங்கள், அந்த இலக்கிய ஆக்கங்கள் குறித்த அறிமுகமாக இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.

புதுமலர் - பாவேந்தர் பாரதிதாசன் சிறப்பிதழ்
ஆசிரியர்: கண.குறிஞ்சி
புதுமலர் பதிப்பகம்
விலை: ரூ.100
தொடர்புக்கு: 94433 07681

பாரதிதாசன் சிறப்பிதழாக மலர்ந்துள்ள இந்த இதழில், பாரதிதாசன் நினைவலைகளை ஈரோடு தமிழன்பன் பகிர்ந்துள்ளார். ஜமாலன், பொதியவெற்பன், எஸ்.சண்முகம் உள்ளிட்டவர்களின் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in