

தமிழர் கடல் வாணிப வரலாறு
தமிழ் முஸ்லிம்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்
ஜெ.ராஜா முகமது
ஜமால் முகமது கல்லூரி வெளியீடு
விலை: ரூ.280
தொடர்புக்கு: 0431 2331135
பண்டைய தமிழர் செய்த கடல் வாணிபத்தில் முஸ்லிம்களின் பங்கு முக்கியமானது. 15ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு, கடல் வாணிபத்தில் பல விதத்தில் அவர்கள் வகித்த பங்கை இந்நூல் விவரிக்கிறது.
சிகரி மார்க்கம்
கே.முகம்மது ரியாஸ்
சீர்மை பதிப்பகம்
விலை: ரூ.175
தொடர்புக்கு: 8072123326
நவீன இஸ்லாமிய வாழ்க்கையை இந்தத் தொகுப்பிலுள்ள கதைகள் பதிவுசெய்கின்றன. புலம்பெயர் வாழ்வும் பண்பாட்டு மாற்றங்களும் இதற்குள் இருக்கின்றன.
ஆகாயத்தின்
அந்தப் புறம்
சக்திமான் அசோகன்
நிமிர் புத்தகப் பட்டறை
விலை: ரூ.300
தொடர்புக்கு: 9444009730
புதிய பண்பாட்டு மாற்றங்கள், அன்றாட நிகழ்வுகள் என எல்லாவற்றையும் இக்குறுங்கவிதைகளுக்குள் சித்திரிக்க முயன்றுள்ளார் கவிஞர். ஹைக்கூ வடிவத்தை ஒத்த கவிதைகள் இவை.
வருங்காலம் இவர்கள் கையில்
என்.சொக்கன்
ஜீரோ டிகிரி பப்ளிஷிங்
விலை: ரூ.160
தொடர்புக்கு: 8925061999
புதிய தகவல் தொடர்புத் துறை புரட்சியில் உருவாகியுள்ள நிறுவனங்களைப் பற்றிய நூல் இது. இவையே வருங்காலம் என்கிறார் நூலாசிரியர்.
ஐந்தருவி
(வரலாறு - வாழ்வியல் - விழிப்புணர்வு)
ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ், அ.மைக்கேல் குருஸ்
யே.சாந்தக்குமார், அ.பெளலியன்ஸ், சூ.அன்பரசன்
வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்றம்
விலை: ரூ.150
தொடர்புக்கு: 9842589571
சமயம், சமூகம், இலக்கியம் எனப் பல தலைப்புகளில் ஐந்து முனைவர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. அதனால் ஐந்தருவி எனப் பெயர் பெற்றுள்ளது.