

கண்களிலொரு பெரிய கடல்
நா.மைதீன், இரா.அன்புச்செல்வன்
வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்றம்
விலை: ரூ.80
தொடர்புக்கு: 9842589571
நா.மைதீன், இரா,அன்புச்செல்வன் ஆகிய இருவரின் கவிதைகளும் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. இக்குறுங்கவிதைகளுக்கு
மாணவர்களின் நவீன ஓவியங்கள் சிறப்புச் செய்துள்ளன.
தணிவது…
கா.சு.வேலாயுதன்
கதை வட்டம்
விலை: ரூ.200
தொடர்புக்கு: 9994498033
எளிய மனிதர்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் கதைகள் இவை. அவர்களது இயல்பான மொழியிலேயே இந்தக் கதைகள் எழுதப்பட்டுள்ளது சிறப்பான அம்சம்.
காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்
சங்கமித்ரா
வெங்காயம் பதிப்பகம்
விலை: ரூ.80
தொடர்புக்கு: 9600294284
பகுத்தறிவுக் கருத்துகள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு இது. ‘விடுதலை’ இதழில் வெளிவந்த கட்டுரைகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
மிஞிலி, பிராட்டி, மூகுள்
புதுயுகன்
மணிவாசகர் பதிப்பகம்
விலை: ரூ.175
தொடர்புக்கு: 9380530884
நவீன வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களைச் சொல்லும் கதைகள் இவை. எளிய விவரிப்பு மொழியில் எழுதப்பட்டுள்ள இந்தக் கதைகள் வாசிப்புச் சுவாரசியத்தைக் கொண்டுள்ளன.
சங்கத் தமிழ் கூறும் சட்ட நெறி
மு.முத்துவேலு
கழக வெளியீடு
தென்னிந்திய சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகம் லிட்.
விலை: ரூ.130
தொடர்புக்கு: 9884684666
சங்கத் தமிழ் இலக்கியத்தில் சட்ட நெறி குறித்த விவரிப்புகளைச் சொல்லும் நூல் இது. பாடல்கள் மேற்கோளுடன் இந்நூல் கவனத்துடன் எழுதப்பட்டுள்ளது.
மீனுடன் நின்ற கடவுள்
இலக்குமிகுமாரன் ஞானதிரவியம்.ந
வேரல் பதிப்பகம்
விலை: ரூ.250
தொடர்புக்கு: 9578764322
நல் அனுபவத்தில் கட்டி எழுப்பப்பட்ட கவிதைகள் இவை. எளிமையான விவரிப்பு மொழி கவிதைகளுக்குச் சிறப்புச் சேர்க்கிறது.
சோ.தர்மன் வாழ்வும் படைப்பும்
கோ.சந்தனமாரியம்மாள்
யாப்பு வெளியீடு
விலை: ரூ.160
தொடர்புக்கு: 9080514506
சாகித்திய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் சோ.தர்மனின் படைப்புகள் குறித்தும் அவரைக் குறித்ததுமான அறிமுகமாக இந்தக் கட்டுரைத் தொகுப்பு எழுதப்பட்டுள்ளது.
வைக்கம் போராட்டம் தமிழர்களும் மலையாளிகளும்
அனிதா கு.கிருஷ்ணமூர்த்தி
விலை: ரூ.360
தொடர்புக்கு: 9443722618
வைக்கம் போராட்டம் குறித்துப் பரந்துபட்ட அறிவை இந்த நூல் அளிக்கிறது. வைக்கம் போராட்டத்துக்கு முந்தையை நிலை, தோள் சீலைப் போராட்டம் எனப் பல அம்சங்களை இந்த நூல் பேசுகிறது.
சிலப்பதிகாரமும் கண்ணகி வழிபாடும்
ப.ஜெயகிருஷ்ணன்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பி.லிட்.
விலை: ரூ.210
தொடர்புக்கு: 044 26251968
சிலப்பதிகாரத்தில் உள்ள நாட்டார் அம்சங்கள், கேரள, தமிழ்நாட்டுக் கண்ணகி வழிபாடுகள்
போன்றவை குறித்த ஆய்வுக் கட்டுரைகள் இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ளன.
கலைஞர் கவிதைகள் 100
செய்த்தலை க.இராசவேல்
செய்த்தலை பதிப்பகம்
விலை: ரூ.120
தொடர்புக்கு: 9840738337
முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி குறித்த கவிதைகள் இவை. அவரது சமூகப் பங்களிப்பு குறித்த ஓசை நயம் மிக்கக் கவிதைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.