

நெய்தலின் வடிவங்கள்
சி.ஆன்சி மோள்
கடற்கரை பதிப்பகம்
விலை: ரூ.100
தொடர்புக்கு: 7558162827
நெய்தல் வாழ்க்கை, பண்பாடு சார்ந்த பல விஷயங்களை இந்நூல் ஆசிரியர் பகிர்ந்துள்ளார். கடல் சார்ந்த மக்களைப் பழங்குடிகள் என வகைப்படுத்துகிறார்.
ஒரு கவளம் நிலாச்சோறு
மோ.கணேசன்
வாலு பதிப்பகம்
விலை: ரூ.300
தொடர்புக்கு: 9444296929
ஹைக்கூ கவிதைகளின் சங்கமமாக இத்தொகுப்பு உள்ளது. தமிழில் ஹைக்கூ அதிகமாக எழுதப்படுவதற்கு உதாரணமாக இதில் ஹைக்கூ கவிஞர்கள் பலரின் கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன.
ஆனைமலைக் காடுகளில் சுள்ளி பொறுக்குகிறேன்
கவிஜி
படைப்பு பதிப்பகம்
விலை: ரூ.150
தொடர்புக்கு: 7338847788
ஒரு நாளின் கணங்களை, வாழ்க்கையின் விசித்திரங்களைத் தேடிப் பதிவுசெய்துள்ளன இந்தக் கவிதைகள். குழந்தைமையின் வியத்தலும் வெள்ளந்தித்தனமும் இக்கவிதைகளுக்குள் உள்ளன.
அந்தமான் ஜெயில் அனுபவங்கள்
பரிந்திர குமார் கோஷ்
(தமிழில்: ஜனனி ரமேஷ்)
சுவாசம் வெளியீடு
விலை: ரூ.160
தொடர்புக்கு: 8148066645
இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் அரவிந்தரின் தம்பியுமான பரிந்திர குமார் கோஷின் அந்தமான் சிறைச்சாலை அனுபவம் இது.
ஆயிரம் மணி நேர வாசிப்புச் சவால்
சாந்தமூர்த்தி
விருட்சம் வெளியீடு
விலை: ரூ.100
தொடர்புக்கு: 9444113205
ஆயிரம் மணி நேர வாசிப்புச் சவால் போட்டி சமூக ஊடகங்களில் முன்னெடுக்கப்பட்டது. அதில் வென்ற சாந்தமூர்த்தியின் வாசிப்பு அனுபவமே இந்த நூல்.
தமிழர் உணவு
மெய் சித்ரா
காவ்யா பதிப்பகம்
விலை: ரூ.160
தொடர்புக்கு: 9840480232
சங்க இலக்கியங்களிலும் அதற்குப் பின்னால் வந்த படைப்புகளிலும் உள்ள உணவுச் சித்தரிப்பைக் கவனத்துடன் தொகுத்துள்ளார் நூலாசிரியர்.
முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள்
வி.பி.சி.நாயர் (தமிழில்: குறிஞ்சி வேலன்)
அகநி வெளியீடு
விலை: ரூ.375
தொடர்புக்கு: 9444360421
மலையாள எழுத்தாளர்கள் பலரின் நேர்காணல் தொகுப்பு இது. எம்.டி. வாசுதேவன் நாயர், தகழி சிவசங்கரப் பிள்ளை, புனத்தில் குஞ்ஞப்துல்லா போன்ற பலரின் நேர்காணல்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
சிற்றிலக்கிய விருந்து
எம்.அல்போன்ஸ்
மணிவாசகர் பதிப்பகம்
விலை: ரூ.150
தொடர்புக்கு: 9380530884
பள்ளு, தூது, உலா, பிள்ளைத்தமிழ், கலம்பகம், கோவை, குறவஞ்சி போன்ற பலவகையான தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் குறித்தான நூல் இது.
அரிதாரம்
ஜே.கே.ருத்ரா
யாழன் பதிப்பகம்
விலை: ரூ.100
தொடர்புக்கு: 9884602541
குடும்ப அமைப்பால் பெண்கள் தங்கள் சுயத்தை இழந்ததைச் சொல்கின்றன இந்தக் கவிதைகள். பெண்கள் பக்கம் நின்று பேசும் உரத்த குரல் கொண்ட கவிதைகள் இவை.
சிந்துவெளி செந்தமிழ்
சந்திர சேகரன்
நியூ சென்னை பப்ளிகேஷன்ஸ்
விலை: ரூ.280
தொடர்புக்கு: editorncp1@gmail.com
சிந்துவெளி நாகரிக மொழி தமிழ் மொழி என இந்த நூல் விளக்குகிறது. சிந்துவெளி வரிவடிவத்தை வைத்து இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.
திண்ணை: இந்து தமிழ் திசை புத்தகக் காட்சி - உலகப் புத்தக நாளை ஒட்டி இந்து தமிழ் திசை பதிப்பகத்துடன் இணைந்து வள்ளி புத்தக உலகம் வரும் 17ஆம் தேதி (17.04.24) வரை குரோம்பேட்டை, ராதா நகர் மெயின் ரோடு, செல்வம் மஹாலில் புத்தகக் காட்சியை ஒருங்கிணைத்துள்ளது. காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை புத்தகக் காட்சி நடைபெறும். இந்தப் புத்தகக் காட்சியில் 10 சதவீதத் தள்ளுபடியில் புத்தகங்கள் கிடைக்கும். தொடர்புக்கு: 98843 55516