

மறந்துபோன மருந்துகள்
ப.செகந்நாதன், ஜெ.மங்கையர்க்கரசி
மருத்துவப் பதிப்பகம்
விலை: ரூ.450
தொடர்புக்கு: 044 26640533
நம் அன்றாட வாழ்வில் நூறு, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்து இன்று மறைந்துபோய்விட்ட மருந்துகளை இந்நூல் பட்டியலிடுகிறது.
கனவின் இசைக் குறிப்பு
மைதிலி கஸ்தூரிரங்கன்
மலர் தரு பதிப்பகம்
விலை: ரூ.120,
தொடர்புக்கு: 9842528585
மண்ணை, மனிதர்களை, காதலனைப் பாடும் கவிதைகள் இவை. கணத்தின் அற்புதத்தில் லயிக்க விரும்பும் கவிஞரின் மனது கவிதைக்குள் வெளிப்பட்டுள்ளது.
அயோத்திதாச பண்டிதரும் சமகால பெளத்த ஆளுமைகளும்
பெ.விஜயகுமார்
பாபாசாகேப் அம்பேத்கர்
கலை இலக்கியச் சங்கம்
விலை: ரூ.260, தொடர்புக்கு: 9884744460
அயோத்திதாசப் பண்டிதரின் பன்முக ஆளுமையும் செயல்பாடுகளும் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. சிங்காரவேலனார், மாசிலாமணியார் போன்ற அவரது சமகால ஆளுமைகள் குறித்தும் இதில் விவரிக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டில் காட்டுமன்னார்கோயில் அன்றும் இன்றும்
புலவர் வாகைப்புரவலன்
புலவர் தில்லை எழிலன்
தமிழோலக்கம் வெளியீடு
விலை: ரூ.250, தொடர்புக்கு: 9444534092
ஆற்றங்கரையில் நாகரிகம் தோன்றியதிலிருந்து காட்டுமன்னார்கோயில் குறித்த விவரிப்புகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. சோழர்கள் காலத்தில் நடந்த வரலாற்றுத் தடங்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
பாதிக் கதையும் மீதிக் கதையும்
எ.சோதி
நன்மொழிப் பதிப்பகம்
விலை: ரூ.70
தொடர்புக்கு: 9345450749
சிறார்களுக்கான எளிய கதைகளின் தொகுப்பு. இதில் அவர்களையும் பங்குகொள்ள வைக்கும் பொருட்டு இந்தத் தொகுப்பு எழுதப்பட்டுள்ளது.