திண்ணை: மா.அரங்கநாதன் விருது

திண்ணை: மா.அரங்கநாதன் விருது
Updated on
1 min read

தமிழ் எழுத்தாளர்களில் தனித்துவமானவர் மா.அரங்கநாதன். தொடக்க காலத் தமிழ் நவீனக் கவிதை வளர்ச்சியில் இவரது கவிதைகளுக்கும் பங்குண்டு. எளிமையும் தீர்க்கமும் கொண்ட இவரது கதைகள் வாசகருக்குப் புதிய உலகைத் துலங்கவைப்பவை.

மா.அரங்கநாதன் நினைவை ஒட்டி ஆண்டுதோறும் ஏப்ரல் 16இல் விருதுகள் வழங்கப்படுகின்றன. வைணவ உரைவளம் என்கிற தலைப்பில் ஆய்வுசெய்த பேராசிரியர் தெ.ஞானசுந்தரம், புனைவு இலக்கியம், திறனாய்வு உள்ளிட்ட பல் துறைகளில் பங்களிப்பு செய்த கு.வெ.பாலசுப்பிரமணியன் ஆகிய இருவருக்கும் இந்த ஆண்டுக்கான மா.அரங்கநாதன் விருது வழங்கப்படவுள்ளது.

விருது விழா வரும் 16ஆம் தேதி (16.04.24) மாலை 6 மணி அளவில் அண்ணா சாலை, ராணி சீதை அரங்கத்தில் நடைபெறவுள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவன், எழுத்தாளர்கள் அகரமுதல்வன், ரவிசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் இந்த விழாவில் கலந்துகொள்கின்றனர்.

இந்து தமிழ் திசை புத்தகக் காட்சி: உலகப் புத்தக நாளை ஒட்டி இந்து தமிழ் திசை பதிப்பகத்துடன் இணைந்து வள்ளி புத்தக உலகம் வரும் 17ஆம் தேதி (17.04.24) வரை குரோம்பேட்டை, ராதா நகர் மெயின் ரோடு, செல்வம் மஹாலில் புத்தகக் காட்சியை ஒருங்கிணைத்துள்ளது. காலை 10 மணி முதல் இரவு 9 மணி புத்தகக் காட்சி நடைபெறும். இந்தப் புத்தகக் காட்சியில் 10 சதவீதத் தள்ளுபடியில் புத்தகங்கள் கிடைக்கும். தொடர்புக்கு: 98843 5516

தமுஎசக கூடுகை: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் கூடுகை நாளை (07.04.24) மதுரை டி.எம்.எஸ்.
சிலை அருகில் நடைபெறவுள்ளது. கவிதை வாசிப்பு, இந்தியாவை வரைதல், தமிழ்நாடு வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துக் கூட்டறிக்கை வெளியிடுதல் ஆகிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

எழுத்தாளர்கள் எஸ்.லட்சுமணப்பெருமாள், ச.தமிழ்ச்செல்வன், நந்தலாலா, உதயசங்கர், காமுத்துரை, பக்தவத்சலபாரதி, நாறும்பூநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றனர். என்.ஸ்ரீராமுக்கு விருது அமரர் சிவ. சுந்தரம் நினைவாக ஆண்டுதோறும் வழங்கப்படும் தஞ்சை ப்ரகாஷ் இலக்கிய விருது இந்த ஆண்டு எழுத்தாளர் என்.ஸ்ரீராமுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. என்.ராம் தமிழின் சிறந்த புனைவு எழுத்தாளார்களில் ஒருவர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in