Published : 28 Apr 2018 09:05 AM
Last Updated : 28 Apr 2018 09:05 AM

நல்வரவு: மாயக்குதிரை

மாயக்குதிரை,

தமிழ்நதி

டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை – 78

044-6515 7525 / 87545 07070

விலை: ரூ.150

போர் சிதைத்த வாழ்க்கை, புகலிடத்தின் விரக்தி என இத்தொகுப்பிலுள்ள ஒவ்வொரு கதையும் சிதிலமாக் கப்பட்ட ஒரு இனத்தின் மனிதத்தைப் பேசுகிறது. யூமா வாசுகி குறிப்பிடுவதுபோல மனக்கோலம், மலைகள் இடம்பெயர்ந்து செல்வதில்லை, காத்திருப்பு கதைகள் உருவாக்கும் சோர்விலிருந்தும், வாழ்விலிருந்தும் உடனடியாக மீள முடியவில்லை. யதார்த்த உலகின் மனிதம் பேசும் இந்தச் சிறுகதைகள் மூலம் தமிழ்நதி எழுத்தின் வலிமையை மீண்டும் ஒருமுறை உசுப்பிவிடுகிறார்.

 

தொப்புள்கொடி பூத்த காடு,

நவஜீவன்

அகநி வெளியீடு, வந்தவாசி - 604 408

9498043637 / 94443 60421

விலை - ரூ.90

மிக எளிமையான சொற்கட்டுமானத்தில் எழும்பி நிற்கின்றன நவஜீவன் கவிதைகள். சமூகத்தின் உள்ளக் கிடக்கையை எழுத்தில் கொண்டுவரும் அக்கறை. `மகளே எல்லோரையும் சந்தேகி / இமை மைபோல மறைந்திருக்கட்டும் சந்தேகத்தின் கோடுகள்’ என சமகாலத் தேவையை வலியுறுத்துகிறது இவரது கவிதை மொழி. வெறும் வாசிப்பிற்கான கவிதையாக இல்லாமல், சமூகம் குறித்த மீள்பார்வைக்கு வாசகனை அழைத்துச்செல்லும் தொகுப்பு.

மதுவந்தி

ஜி.ஆர்.சுநேந்தர்நாத்

சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்

சென்னை – 600017.

044 – 24342771 / 65279654

விலை: ரூ.125

சுய பச்சாதாபங்களைப் பேசும் காதல் கதைகளுக்கு மத்தியில், காதல் கதைகளைக் கொண்டாட்டமாக அணுகுபவர் ஜி.ஆர்.சுரேந்தர்நாத். பல்வேறு இதழ்களில் வெளிவந்த பத்து சிறுகதைகள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. காதலின் துயர்மிகு தருணங்களை யும் எளிதாகக் கடக்கச்செய்யும் இவரது கதைகளில் இளைஞர்களின் காதல், நடுத்தர வயதுக் காதல், முன்னாள் காதலி சந்திப்பு என அனைத்து விதங்களிலும் காதலைக் கொண்டாட்டமாக்குகிறார்.

 

மஞ்சள் பிசாசு - தங்கத்தின் அரசியல் பொருளாதார வரலாறு

அ.வி.அனிக்கின் தமிழில் நா.தர்மராஜன்

அடையாளம், புத்தாநத்தம் – 623 310

04332 – 273444 / 94447 72686

விலை: ரூ.270

 

தங்கம் என்கிற மஞ்சள் உலோகம் எவ்வாறு தோண்டியெடுக்கப்படுகிறது என்பதில் தொடங்கி, உலகத்தில் உள்ள தங்கம் அனைத்தும் எங்கே செல்கிறது என்பது வரை புதிய உலகத்துக்குள் அழைத்துச்செல்கிறார் அனிக்கின். இந்த நூல், முதலில் 1978-ம் ஆண்டு ரஷ்ய மொழியில் வெளியானது. 1983-ம் ஆண்டு ஆங்கிலப் பதிப்பிலிருந்து தமிழில் பேராசிரியர் நா.தர்மராஜன் மொழிபெயர்த்திருந்தார். மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகம் வெளியிட்டிருந்தது. இந்தப் பதிப்பு ஆங்கில நூலுடன் ஒப்பிட்டு, விடுபட்ட பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளதுடன், புதிய கலைச் சொற்கள், கால மாற்றத்துக்கு ஏற்ற தரவுகளுடன் வெளிவந்துள்ளது.

தொகுப்பு: நீரை மகேந்திரன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x