தஞ்சை அதிரும் சின்னமேளம்

தஞ்சை அதிரும் சின்னமேளம்
Updated on
1 min read

இசைக்குழுவின் அடிப்படையில் சங்கீத மேளம், பாகவத மேளம், நையாண்டி மேளம், உறுமி மேளம், பெரிய மேளம் என்று வெவ்வேறு பெயர்கள் இருக்கின்றன. இதில் பெரிய மேளம் என்பது நாகசுரம், தவில், ஒத்து, தாளம் போன்றவற்றைக் கொண்ட இசைக் குழுவினரைக் குறிக்கிறது. அப்படியானால் சின்ன மேளம்? நாட்டிய மரபில், சிவ, வைணவ ஆலயங்களில் வழிபாட்டிற்கென ஆடப்படும் நாட்டியமே ‘சின்ன மேளம்’. நாட்டியமாடுகிற கலைஞர்கள், நட்டுவாங்கம் செய்யும் நட்டுவனார், முட்டுக்காரர் எனப்படும் மிருதங்க வாத்தியக் கலைஞர், குழலிசைக் கலைஞர், தித்திக்காரர் எனப்படும் சுதியிசைக் கலைஞர்கள் ஆகியோர் அடங்கிய குழுவுக்கு ‘சின்ன மேளம்’ என்று பெயர்.

2010-ம் ஆண்டிலிருந்து பழைய மரபை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவந்திருக்கிறார் தஞ்சாவூர் நாட்டிய ஆசான் பா.ஹேரம்பநாதன். 2010-ல் தஞ்சை பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழா கொண்டாடப்பட்டபோது, சின்ன மேளக் கச்சேரிகளின் வரலாற்றுத் தொடர்ச்சிக்கு மீண்டும் கால்கோள்செய்தார் ஹேரம்பநாதன். அப்போது முதல் கடந்த எட்டு ஆண்டுகளாகத் தஞ்சை பெரிய கோயிலில் சித்திரைப் பெருவிழாவின்போது சின்ன மேளம் விழாவை அவர் நடத்திவருகிறார். இவ்வாண்டிற்கான சின்ன மேளம் விழா கடந்த 10-ம் தேதி தொடங்கியது. 30-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. “இந்த விழா தொடர்ச்சியாக சிறப்பான முறையில் நடைபெறுவதற்குத் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் முழு ஒத்துழைப்பு நல்கி, உதவுகிறது. சின்ன மேளம் நாட்டிய மரபினை, அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்வதற்கு இந்த நிகழ்ச்சி பயன்படுகிறது என்பதில் மனநிறைவடைகிறேன்” என்றார் ஹேரம்பநாதன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in