Published : 28 Apr 2018 08:58 AM
Last Updated : 28 Apr 2018 08:58 AM

பிறமொழி நூலறிமுகம்: அற்புத அபிநவ வித்யா தீர்த்தர்

சி

ருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் 35-வது சங்கராசாரியார் ஜகத்குரு ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த மகா சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றையும் அவருடைய அருளுரைகளையும் எளிமையான ஆங்கிலத்தில் சுவையாகச் சொல்கிறது இந்நூல். மொத்தம் 27 அத்தியாயங்கள். சுமார் ஆயிரம் புகைப்படங்கள். சுவாமிகள் மேற்கொண்ட பயணங்களின் விவரமும் சம்ஸ்கிருத மேற்கோள்களும் தனியாகப் பிரித்துத் தரப்பட்டுள்ளது. சுவாமிகளின் பூர்வாச்ரமம், குருவைச் சந்தித்தது, 14-வயதிலேயே துறவறம் ஏற்றது, ஹடயோகம், குண்டலினி உட்பட பல்வேறு பயிற்சிகளைப் பெற்றது, தன்னை உணர்ந்துகொண்டது, 1954-ல் பீடாதிபதி ஆனது, அடுத்த 35 ஆண்டுகள் ஸ்ரீ மடத்தைச் சிறப்பாக நிர்வகித்தது விளக்கப்பட்டிருக்கிறது. சுவாமிகள் தேசப்பற்று மிக்கவராகவும் திகழ்ந்தார். 1962, 1965, 1971 என்று நாடு அந்நியரால் தாக்கப்பட்ட போதெல்லாம் சுவாமிகள் இந்தியாவுக்கு வந்த அபாயங்கள் நீங்க சிறப்புப் பூஜைகள் செய்ததுடன், யுத்த நிதிக்கு ஸ்ரீ மடத்து சீடர்கள் வழங்கிய பணத்திலிருந்து தாராளமாக நன்கொடை தந்திருக்கிறார். ஆன்மிக குருவாக இருந்து வேதங்களையும் உபநிஷதங் களையும் கற்று, விரிவுரை ஆற்றிய நிலையிலும் அறிவியல் கருத்துகள் மீதும் ஆய்வுகள் மீதும் அக்கறை காட்டிவந்தார். கர்நாடகம் மட்டுமல்லாமல் ஆந்திரம், தமிழ்நாடு, கேரளம் என்று அனைத்து மாநிலங்களிலும் சுற்றுப்பயணம் நிகழ்த்திய அவர், ஆதி சங்கரர் பிறந்த காலடியில் அவருடைய வீட்டை அடையாளம் கண்டு, அதைத் தேசிய அடையாளமாக மாற்றப் பெரிதும் காரணமாக இருந்திருக்கிறார். இந்தியாவில் தொடர்ந்து துலங்கும் ஆன்மிக ஒளிக்கு மேலும் மெருகூட்டிய அருளாளர்களில் சுவாமி களுக்கு முக்கியப் பங்கு உண்டு.

- சாரி

தி மல்டிஃபேஸடட் ஜீவன்முக்தா

ஸ்ரீ வித்யாதீர்த்தர் அறக்கட்டளை

சென்னை.

விலை - ரூ. 300,

90031 92825

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x