நூல் வரிசை

நூல் வரிசை
Updated on
3 min read

இசை அரசி
கே.பி.சுந்தராம்பாள்
முத்துரத்தினம்
சரண் பதிப்பகம்
விலை: ரூ.150
தொடர்புக்கு: 94438 83966

தமிழர்கள் நெஞ்சில் ஒளவையாராக இருப்பவர் கே.பி.சுந்தராம்பாள்தான். இவரது நடிப்புத் திறன், நட்பு, ஆளுமை பற்றி சான்றோர் பலர் எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.

தமிழ் முஸ்லிம்களின்
வரலாறும் வாழ்வியலும்
ஜெ.ராஜா முகமது
திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி வெளியீடு
விலை: ரூ.200
தொடர்புக்கு: 0431 2331135

தமிழ் முஸ்லிம்களின் பொ.ஆ. (கி.பி) 19 நூற்றாண்டு வரையிலான வரலாற்றை வலுவான தரவுகளுடன் சொல்லும் நூல் இது. தமிழ் முஸ்லிம்களின் மொழிப் பங்களிப்பையும் இந்நூல் பறைசாற்றுகிறது.

காவியத் தலைவி
ராணி மங்கம்மாள்
வி இந்தியன் போஸ்
ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
விலை: ரூ.160
தொடர்புக்கு: 044 24331510

மதுரையை ஆண்ட நாயக்க அரசி ராணி மங்கம்மாள், வரலாற்றுச் சிறப்புமிக்க ஆளுமை. அவரது கீர்த்தியைச் சொல்லும் நாவல் இது.

தலைவர்களின்
மாணவப் பருவம்
ஆதனூர் சோழன்
நக்கீரன் பதிப்பகம்
விலை: ரூ.175
தொடர்புக்கு: 044 43993029

அலெக்ஸாண்டர், நெப்போலியன், சே குவேரா, பிடல் காஸ்ட்ரோ ஆகிய தலைவர்களின் மாணவப் பருவத்தைச் சொல்லும் நூல் இது. அதன் வழி அவர்களின் ஆளுமை உருவான விதத்தை விவரிக்கிறது இந்நூல்.

போர்வைக்குள் பூனைக்குட்டி
அருள்
கடற்கரை பதிப்பகம்
விலை: ரூ.120
தொடர்புக்கு: 09791604907

சினிமாவுக்காக இன்று கதைகள் எழுதப்படும் போக்கு உருவாகியுள்ளது. இந்த நூலில் நேரடியாக சினிமாவுக்கான திரைக்கதைகளையே எழுதியிருக்கிறார் நூல் ஆசிரியர்.

சீவக சிந்தாமணி
(நாவல் வடிவில்)
சத்தியப்பிரியன்
சுவாசம் பதிப்பகம்
விலை: ரூ.260
தொடர்புக்கு: 8148066645

சிலப்பதிகாரம், மணிமேகலையைத் தொடர்ந்து உருவான காவியம் சீவக சிந்தாமணி. அதன் நாவல் வடிவம் இது.

அழகியசிங்கரின்
இரு குறுநாவல்கள்
அழகியசிங்கர்
விருட்சம் வெளியீடு
விலை: ரூ.60
தொடர்புக்கு: 9444113205

பரபரப்பு அற்ற தன்மையான எழுத்துக்குச் சொந்தக்காரர் அழகியசிங்கர். கொலை, விசாரணை என்கிற கருப்பொருளிலான ஒரு கதை இந்தத் தொகுப்பில் சுவாரசியமாக உள்ளது.

கூவம் (நாவல்)
சுந்தரபாண்டியன்
காவ்யா பதிப்பகம்
விலை: ரூ.250
தொடர்புக்கு: 9840480232

தாமிரபரணிக் கரையில் பிறந்தவன் கூவம் நதிக் கரையில் பிழைக்க வந்த அனுபவத்தை இந்த நாவல் கூறுகிறது. அதனுடன் அரசியலும் சொல்லப்பட்டுள்ளது.

பெண் கதவு! ஆண் பூட்டு!!
சேவு.முத்துக்குமார்
மெளவல் பதிப்பகம்
விலை: ரூ.130
தொடர்புக்கு: 9787709687

குடும்ப அமைப்பு குறித்த நூல் இது. இந்த அமைப்புக்குள் கணவன், மனைவியின் பங்கு என்ன, எப்படி இருக்க வேண்டும் எனப் பல விஷயங்களை விளக்குகிறது இந்நூல்.

பத்திரங்கள் எழுதும் முறைகளும் சட்ட விளக்கமும்
வீ.சந்திரன்
புத்தகப் பூங்கா
விலை: ரூ.200
தொடர்புக்கு: 9444214272

சொத்துப் பதிவு, தான செட்டில்மென்ட் எனப் பல வகையான பத்திரங்களை எழுதும் முறைகள் இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ளன.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in