நூல் வரிசை

நூல் வரிசை
Updated on
2 min read

வசந்த வாய்ப்புகள்
சீ.சுரேஷ்குமார்
கனவுத்தமிழ் பதிப்பகம்
விலை: ரூ.150
தொடர்புக்கு: 9840321522

சிறுபான்மையினருக்கான அரசின் திட்டங்களை எளிய மக்களுக்கும் புரியும் வகையில் இதில் நூலாசிரியர் பகிர்ந்துள்ளார். கட்டுரை, கதை ஆகிய வடிவங்களில் இவற்றை எழுதியுள்ளார்.

குழந்தைமை ரகசியம்
மரியா மாண்டிசோரி
(தமிழில்: சி.ந.வைத்தீஸ்வரன்)
முல்லை பதிப்பகம்
விலை: ரூ.300
தொடர்புக்கு: 9840358301

குழந்தைகள் ஏன் அழுகின்றன, ஏன் சிரிக்கின்றன என்பது தாய்க்குத் தெரியும் என்பார்கள். தாய்க்கும் தெரியாத ரகசியம் இருக்கிறது, அதைத் திறந்துகாட்டுகிறது இந்நூல்.

எங்களோட கதை
இரா.பிரேமா
ஹெர் ஸ்டோரீஸ்
விலை: ரூ.120
தொடர்புக்கு: 7550098666

பல்வேறு வகைப்பட்ட பெண்களைக் கதையாசிரியர் இதற்குள் சிருஷ்டித்துள்ளார். அவர்களது வாழ்க்கை அனுபவங்களைப் பொது வாசிப்புக்கான விஷயமாக இதில் திறம்பட மாற்றியுள்ளார்.

ஏன் இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்?
மணி கணேசன்
இனிய நந்தவனம் பதிப்பகம்
விலை: ரூ.150
தொடர்புக்கு: 9443284823
இன்றைய கல்வித் துறையின் பிரச்சினைகளை அலசும் கட்டுரைகளைக் கொண்ட தொகுப்பு. அரசியல்ரீதியாகவும் உணர்வுபூர்வமாகவும் நூலாசிரியர் இவற்றை விளக்குகிறார்.

அங்காடித் தெருவின் கதை
உமாபதி கே
புஸ்தகா
விலை: ரூ.100
தொடர்புக்கு: 7418555884

தமிழ்நாட்டின் மிக நெருக்கடி மிக்க சந்தைத் தெரு தி.நகர் ரங்கநாதன் தெரு. இந்தத் தெருவின் வரலாற்றைச் சுவைபடச் சொல்லும் நூல் இது.

கவிப்பேரரசர்களின் கவியமுதம்
செ.பாலகிருஷ்ணன்
மித்ரா தேவ் பதிப்பகம்
விலை: ரூ.285
தொடர்புக்கு: 7502844666

திருவள்ளுவர், கம்பர், இளங்கோவடிகள், வில்லிபுத்தூர் ஆகிய கவிகளின் கவித் திறனைச் சுவைபட நூலாசிரியர் இதில் விளக்கியுள்ளார். இக்கவிகளின் வரிகளை எடுத்து அவற்றுக்குள் பொதிந்துள்ள அகச்சுவையை வாசகர் அறியும் வண்ணம் இந்நூல் கட்டுரைகள் வழி விளம்பியுள்ளார் இவர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in