நூல் வரிசை

நூல் வரிசை
Updated on
2 min read

பாரத நாட்டுச் சரித்திரக் கதைகள்
பி.ஸ்ரீ

முல்லை பதிப்பகம்
விலை: ரூ.150
தொடர்புக்கு: 9840358301

இந்தியாவின் உதாரண புருஷர்கள் பலரும் இந்தக் கதைகளில் வருகிறார்கள். சிந்தனையைத் தூண்டும் சுவாரசியம் மிக்க கதைகள்.

மிசா முதல் கோட்டை வரை
மு.ஞா.செ.இன்பா

கைத்தடி பதிப்பகம்
விலை: ரூ.400
தொடர்புக்கு: 9566274503

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அரசியல் பயணத்தை விவரிக்கும் நூல் இது. வார இதழ் ஒன்றில் வெளிவந்த தொடரின் நூலாக்கம் இது.

சிலப்பதிகாரத்தில் பிழையா? (ஓர் ஆய்வு)
செம்பை சேவியர்

வினோத் பதிப்பகம்
விலை: ரூ.60
தொடர்புக்கு: 9444025315

சிலப்பதிகாரத்தைத் தெலுங்கில் மொழிபெயர்த்த பூதலப்பட்டு ராமுலு ரெட்டி அதில் கால முரணைச் சுட்டிக்காட்டியுள்ளார். அதன் தொடர்ச்சியாக இந்தக் கட்டுரை அந்தக் காலக் குழப்பத்தைப் பாட்டுடன் சொல்கிறது.

திண்ணை - திருவண்ணாமலை புத்தகக் காட்சி: மாவட்ட நிர்வாகம், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து ஒருங்கிணைக்கும் திருவண்ணாமலை மாவட்டப் புத்தகக் காட்சி, காந்தி நகர் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. நாளை வரை நடைபெறவுள்ள (17.03.24) இந்தப் புத்தகக் காட்சியில் இந்து தமிழ் திசை பதிப்பகமும் (அரங்கு எண்: 49) கலந்துகொண்டுள்ளது. காலை 10.30 மணிக்குத் தொடங்கி இரவு 9 மணி வரையும் புத்தகக் காட்சி நடைபெறும்.

வத்ஸலாவின் தேர்ந்தெடுத்த

கவிதைகள்
ஆர்.வத்ஸலா
ரெட் ரிவர், விலை: ரூ.699,
தொடர்புக்கு: 9444924308
ஆன்லைனில் வாங்க:
https://www.amazon.in/Vatsalavin-Therndheduththa-Kavidhaigal
-R-Vatsala/dp/9392494440

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in