

ஐக்கூ அறுபது
பட்டாபிராம் இந்துக் கல்லூரி வெளியீடு
விலை: ரூ.250
தொடர்புக்கு: 044 – 26850887
பட்டாபிராம் இந்துக் கல்லூரி மாணவர்கள் 60 பேர் எழுதிய ஹைக்கூ கவிதைகளின் தொகுப்பு இது. ‘வெள்ளம் வடிந்த மண்ணில் விண்மீனைப் பதிக்கிறது கொக்கு’ என்பது போன்ற கவித்துவக் காட்சிகள் இந்தக் கவிதைகளில் வெளிப்பட்டுள்ளன.
யாரும் இன்னொருவர் இல்லை
குன்வர் நாராயண்
(தமிழில்: எம்.கோபாலகிருஷ்ணன்)
சாகித்திய அகாதெமி வெளியீடு
விலை: ரூ.250
தொடர்புக்கு: 044-24311741
இந்தி கவிதைகளைப் பற்றி அறிந்துகொள்வதற்கான வாய்ப்பாக இந்தக் கவிதைத் தொகுப்பு இருக்கிறது. எளிமையும் ஆழ்பொருளும் கொண்ட கவிதைகள் இவை.
இருபதாம் நூற்றாண்டில் கர்நாடகம்
முனைவர் அ.பிச்சை
நியூஸ்மேன் பப்ளிகேஷன்ஸ்
விலை: ரூ.200
தொடர்புக்கு: 0452 4396667
கர்நாடகத்தின் கடந்த நூற்றாண்டின் சிறப்புகள், ஆளுமைகள் குறித்த குறிப்புகள் இந்தப் புத்தகத்தில் உள்ளன. காந்தியின் வருகை, நவீன மாற்றங்கள் குறித்த வரலாறும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
திரைக்கதைகள் நூல் வரிசை
சுப்ரபாரதிமணியன்
நிவேதிதா பதிப்பகம்
விலை: ரூ.250
தொடர்புக்கு: 8939387296
குறிப்பிடத்தகுந்த சிறுகதை எழுத்தாளரான சுப்ரபாரதிமணியனின் திரைக்கதைகள் இவை. பல பின்னணிகளில் அமைந்த கதைகளைக் காட்சிகளாகப் பிரித்து எழுதியிருக்கிறார்.
தமிழ் சினிமா: அரசியலும் அழகியலும்
வசந்த் பாரதி
தட்டான் பதிப்பகம்
விலை: ரூ.100
தொடர்புக்கு: 82204 60105
சமீப கால சினிமா, பொழுதுபோக்கு என்கிற அம்சத்தையும் தாண்டி வலுவான அரசியலைப் பேசுகிறது. அந்தப் படங்களின் அரசியலை ஆராய்கிறது இந்நூல்.