

போதி மரத்தைக் காணவில்லை
சுதாகர் ஜெயராமன்
வாமடை வெளியீடு
விலை: ரூ.100
தொடர்புக்கு: 8807906660
பேச்சு வழக்கு, கவித்துவம் என இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் சுதந்திரமாக வெளிப்பட்டுள்ளன. நினைவின் ஓர்மைக்கு ஒரு மொழி கொடுத்துள்ளார் கவிஞர்.
தந்தை பெரியார் ஓர் அறிமுகம்
சொக்கலிங்கம்
வெங்காயம் பதிப்பகம்
விலை: ரூ.60
தொடர்புக்கு: 9600294284
பெரியார் தமிழ்ச் சமூகத்தின் சீர்திருத்தவாதி. இன்றைய காலகட்டத்திலும் பொருத்தப்பாடுள்ள அவரை இளம் தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் நூல் இது.
1331
ஜோ
ஆதிரா வெளியீடு
விலை: ரூ.500
தொடர்புக்கு: 9944992571
எல்லாக் குறள்களுக்கும் அதே அடிகளின் அளவில் விளக்கம் எழுதியிருக்கிறார் ஜோ. புதுக்கவிதை பாணியில் வள்ளுவத்தை மறு ஆக்கம் செய்யும் முயற்சி எனலாம்.
மெய்ப்பாடுகள்
இரா.திருப்பதி வெங்கடசாமி
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
விலை: ரூ.280
தொடர்புக்கு: 044 26251968
நகைச்சுவை, துன்பம், கோபம் எனப் பல வகையான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வாழ்க்கைப் பயணத்தைப் பற்றிய சுவாரசியமான கட்டுரைகள் இவை.
யார் சார் இன்னைக்கு
ரேடியோ கேட்குறாங்க?
ஒருங்கிணைப்பு: தங்க.ஜெய்சக்திவேல்
டெஸ்லா பதிப்பகம்
விலை: ரூ.150
தொடர்புக்கு: 9791349884
சமூக வலைதளம், காட்சி ஊடகங்கள் வளர்ந்துவிட்ட இந்தக் காலகட்டத்தில், வானொலியின் நிலையை உணர்த்தும் நூல் இது. வானொலி கேட்கும் வழக்கம் உள்ளவர்களைக் கண்டு உரையாடி எழுதப்பட்ட தொகுப்பு இது.