நூல் வரிசை

நூல் வரிசை
Updated on
2 min read

தமிழ்நாட்டு மக்களின்
மரபும் பண்பாடும்

சோமலெ
முல்லை பதிப்பகம், விலை: ரூ.300
தொடர்புக்கு: 9840358301

அறிஞர் சோமலெயின் இந்த நூல் விசேஷத்துக்கு உரிய ஒன்று. தமிழ் மக்களின் பண்பாட்டை, தொன்மக் கதைகள், மதங்கள், சடங்குகள் எனப் பல அம்சங்கள் வழி அவர் விளக்கியிருக்கிறார்.

பாசப் பறவைகள்
வி.ஜி.சந்தோசம்

சந்தனம்மாள் பதிப்பகம்
விலை: ரூ.180
தொடர்புக்கு: 044 66259999

தன் வீட்டுக்கு வரும் பறவைகளுடன் தான் கொண்ட உறவு பற்றி அழகான இந்நூலை உருவாக்கியிருக்கிறார் வி.ஜி.சந்தோசம். மனித சிநேகம் மலிந்துவரும் காலகட்டத்தில் இந்த நூல் ஓர் ஆசுவாசம்.

மேடை வசப்படும்
க.சிவகுருநாதன்

வாலி பதிப்பகம்
விலை: ரூ.150
தொடர்புக்கு: 7010283373

மேடைப் பேச்சு என்பது தனிக் கலை. அதன் நுட்பங்களைப் பல தலைப்புகளின் கீழ் தந்துள்ளார் நூலாசிரியர். மேடையை வசப்படுத்த முயல்பவர்களுக்கு இந்நூல் நல் வழிகாட்டியாக இருக்கும்.

திருக்குறள்
அருணன் உரை
அறத்துப்பால்
வசந்தம் வெளியீட்டகம்
விலை: ரூ.150
தொடர்புக்கு: 9384813030

தோழர் அருணன் திருக்குறளின் அறத்துப் பாலுக்கு எழுதியுள்ள உரை. திருக்குறளுக்குப் பலரும் உரை எழுதியிருக்கிறார்கள். அதில் இந்த நூற்றாண்டிலும் குறுக்கீடு செய்யத்தக்க உரை இது.

உளவுக்கு 1000 கண்கள்
நந்தன் மாசிலாமணி

குமுதம் பு(து)த்தகம் வெளியீடு விலை: ரூ.265
தொடர்புக்கு: 044 26426124

உளவுத் தொழில் யாரையும் ஈர்க்கக்கூடியது. பல உளவாளிகளின் கதைகள் சுவாரசியமாக வாசிக்கப்பட்டுள்ளன. தமிழ்ச் சூழலில் கவனிக்கப்படத்தக்க விறுவிறுப்புடன் இந்தக் கதை எழுதப்பட்டுள்ளது.

யதார்த்தக் கதைகள்: மனித இயல்பை, இயலாமையை, கேலியை, அதிகாரத்தை, ஏளனத்தை யதார்த்தமாகப் பேசும் 13 கதைகள் அடங்கிய எம்.எம்.தீனின் சிறுகதைத் தொகுப்பு இது. ஒவ்வொரு கதையும் நமது முகத்தில் அறைகிறது. இதில் எந்தக் கதையும் வாசகனுக்கு அதிர்ச்சி முடிவுகளை அள்ளித் தந்துவிடவில்லை. வனம் விட்டு இறங்கி, ஆற்றில் நீர் அருந்திவிட்டு மீண்டும் வனத்துக்குள் திரும்பும் விலங்கைப் போல, இதிலுள்ள ஒவ்வொரு கதையும் அந்தந்தக் கதாபாத்திரங்களின் இயல்பிலேயே அமைந்திருப்பது சிறப்பு. - அழகு

தன்னூத்து ராசா
எம்.எம்.தீன்

சந்தியா பதிப்பகம்
விலை: ரூ.150
தொடர்புக்கு: 044-24896979

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in