

சச்சிதானந்தன் கவிதைகள்
(தமிழில்: சிற்பி)
காவ்யா பதிப்பகம்
விலை: ரூ.120
தொடர்புக்கு: 044-23726882
சச்சிதானந்தன் மலையாளத்தின் பிரபலக் கவிஞர். தமிழ்க் கவிதை மொழியிலும் மாற்றத்தை விளைவித்தவர். இவரது கவிதைகளின் இணக்கமான மொழிபெயர்ப்பு இது.
பரிசு பெற்ற கதைகள்
இருவாட்சி வெளியீடு
விலை: ரூ.290
தொடர்புக்கு: 9444640986
‘இலக்கிய வீதி’ இனியவன் நினைவுச் சிறுகதைப் போட்டியில் பரிசுபெற்ற கதைகளின் தொகுப்பு இது. எழுத்தாளர் சு.வேணுகோபால் உள்பட 20 எழுத்தாளர்களின் கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன.
தமிழ் மொழியின் வரலாற்றுப் பயணம்
(சங்கம் முதல் இன்று வரை)
வாசு அரங்கநாதன்
காலச்சுவடு, விலை: ரூ.200
தொடர்புக்கு: 04652 278525
தமிழ் மொழியின் எழுத்து வடிவ மாற்றம் உள்பட அதன் நீண்ட வரலாற்றுப் பயணத்தை இந்நூல் தெளிவுபட விளக்குகிறது. பல்லாண்டுக் காலப் பழக்கம் கொண்ட தமிழின் மாற்றம் சுவாரசியம் கொண்டதாக இருக்கிறது.
ஜெயலலிதா மரணம்
எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி
மின்னங்காடி
விலை: ரூ.200
தொடர்புக்கு: 7299241264
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான நூல் இது. தமிழ்நாட்டின் அரசியல் போக்கை மாற்றிய அந்த நிகழ்வு குறித்து பத்திரிகையாளரின் பார்வையில் இந்த நூல் பகிர்கிறது.
அவனும் அவளும்
(புதுக்கவிதை வடிவில் காமத்துப்பால்)
இரா.இராஜாராம்
கடல் பதிப்பகம்
விலை: ரூ.250
தொடர்புக்கு: 8680844408
திருக்குறளின் மூன்றாம் பாலான காமத்துப் பாலில் உள்ள குறள் ஒவ்வொன்றையும் பகிர்ந்து, அதற்குப் பொருள் தரும் விதம் கவிதையாக மாற்ற முயன்றிருக்கிறார் கவிஞர்.
திண்ணை | ஒரு பண்பாட்டின் பயணம் திறனாய்வு: ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன் எழுதிய ‘ஒரு பண்பாட்டின் பயணம் சிந்து முதல் வைகை வரை’ நூல் ஆய்வுக் கருத்தரங்கம், நாளை (11.2.24) காலை 10 மணிக்கு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சிக்குத் தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி தலைமை வகிக்கிறார்.
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக இயக்குநர் சுந்தர் கணேசன், பேரா. ஜெ.சுடர்விழி, எழுத்தாளர் ச. தமிழ்செல்வன் தொல்லியல் கண்காணிப்பாளர் கி. அமர்நாத் ராமகிருஷ்ணா ஆகியோர் உரை நிகழ்த்தவுள்ளனர். தொடர்புக்கு: 73396 14461.