Published : 03 Feb 2018 10:44 AM
Last Updated : 03 Feb 2018 10:44 AM

நினைவலைகள் இலக்கியமாய்…

உலக நாடுகளிலேயே வங்க தேசத்துக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. மற்ற அடையாளங்கள் அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு, தாய்மொழியை முன்வைத்து விடுதலைப் போரை நடத்தித் தனி நாடு கண்ட ஒரே நாடு என்ற பெருமை அதற்கு உண்டு. 1950-லிருந்து 1971 வரை நடந்த இந்த விடுதலைப் போரில், உயிரிழந்தவர்களின் தியாகங்களைப் போற்றி வங்க தேச இலக்கியம் பல வகையில் பதிவுசெய்தே வந்துள்ளது. அவற்றோடு கூடவே இத்தியாகிகளைப் பறிகொடுத்தவர்களின் பேட்டிகள் என வங்க தேச விடுதலைப் போரின் வீச்சை வாய்மொழி, எழுத்து வடிவங்களில் சேகரித்து வழங்கியிருக்கிறார் புது டெல்லியில் ஒரு பெண்கள் கல்லூரியின் ஆங்கிலப் பேராசிரியரான சைதி தாஸ். பெண்களின் இழப்பை அடிநாதமாகக் கொண்டும், பெண்களின் மீதான வன்முறையை ஆவணப்படுத்தியும் வெளிப்பட்டுள்ள எழுத்துக்கள், வாசகரின் நெஞ்சைக் கீறும் தன்மையுடையது. இத்தகைய அளப்பரிய தியாகங்களை மறக்கடிக்க மத அடிப்படைவாதிகள் செய்யும் முயற்சிகளின் பின்னணியில் இந்நூல் மதிப்புமிக்கதொரு ஆவணமாகத் திகழ்கிறது.

- வீ. பா.கணேசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x