Published : 27 Jan 2024 06:18 AM
Last Updated : 27 Jan 2024 06:18 AM
கழிவறை கவிதைகள்
சு.வருண் குமார்
ஸ்ரீசெண்பகா பதிப்பகம்
விலை: ரூ.70
தொடர்புக்கு: 044-24331510
நூலைப் பெண்ணாக்கி அதை நேசிக்கும் கவிதை இதில் உண்டு. சொற் சந்தம் மிக்க பல கவிதைகள் இதில் உள்ளன.
இருபதாம் நூற்றாண்டில் கேரளம்
அ.பிச்சை
நியூஸ்மேன் பப்ளிகேஷன்ஸ்
விலை: ரூ.240
தொடர்புக்கு: 0452-4396667
நவீன கேரளத்தின் வரலாற்றைச் சமூக, அரசியல்ரீ தியாகப் பதிவுசெய்யும் நூல் இது. அதன் இலக்கிய எழுச்சியும் கோக்கப்பட்டுள்ளது சிறப்பான விஷயமாகும்.
ஆனைமலைக் காடுகளில் சுள்ளி பொறுக்குகிறேன்
கவிஜி
படைப்பு பதிப்பகம்
விலை: ரூ.150
தொடர்புக்கு: 73388 97788
மனதில் உறைந்திருக்கும் ஒரு காலகட்டத்தின் நினைவுகளுக்குக் கவிதை வடிவம் கொடுத்துள்ளார் கவிஜி. எளிய சொற்களிலான அனுபவப் பகிர்வுகள் இவை.
சங்கப் பாடல்களில் சாதி, தீண்டாமை இன்ன பிற
வீ.எஸ்.ராஜம்
மணற்கேணி பதிப்பகம்
விலை: ரூ.110
தொடர்புக்கு: 63827 94478
சாதி, தீண்டாமை சங்க இலக்கியத்தில் உண்டா என்பதை ஆராயும் நூல் இது. சாதி, தீண்டாமைக் கோட்பாடுகள் காலந்தோறும் உருப்பெற்றதையும் இந்த நூல் ஆராய்கிறது.
பச்சைப் புறா
கோ.நடராசன்
மின்னங்காடி பதிப்பகம்
விலை: ரூ.150
தொடர்புக்கு: 72992 41264
நீலகிரியின் பசுமைப் பள்ளத்தாக்குப் பகுதியான ஆடாவின் இயற்கை விசித்திரங்களை இந்த நூல்வழி வாசகர்களுக்குத் திறந்துகாட்டுகிறார் நூலாசிரியர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT