Published : 02 Jan 2024 06:14 AM
Last Updated : 02 Jan 2024 06:14 AM

எழும்பூர் புத்தக நிலையத்தில் ‘என்றும் தமிழர் தலைவர்' நூல் வெளியீடு

சென்னை எழும்பூர் புத்தக நிலையத்தில் நடைபெற்ற ‘புத்தகங்களோடு புத்தாண்டைக் கொண்டாடுவோம்' நிகழ்ச்சியில் ‘தமிழ் திசை' வெளியீடான‘என்றும் தமிழர் தலைவர்' நூலை எழும்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் இ.பரந்தாமன் வெளியிட, விடுதலை சிறுத்தை கட்சியின் துணை பொதுச் செயலாளர் கவுதம சன்னா, எழுத்தாளர் ராஜா தமிழ்மாறன் பெற்றுக் கொண்டனர். உடன் சென்னை புத்தக நிலையத்தின் கோ.ஒளிவண்ணன்.

சென்னை: சென்னை எழும்பூர் புத்தக நிலையத்தில் நடைபெற்ற ‘புத்தகங்களோடு புத்தாண்டைக் கொண்டாடுவோம்' நிகழ்ச்சியில் ‘தமிழ் திசை' வெளியீடான ‘என்றும் தமிழர் தலைவர்' நூல் வெளியிடப்பட்டது. எழும்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் இ.பரந்தாமன் நூலை வெளியிட, விடுதலை சிறுத்தை கட்சியின்துணை பொதுச் செயலாளர் கவுதம சன்னா, எழுத்தாளர் ராஜா தமிழ்மாறன் பெற்றுக்கொண்டனர்.

லயோலா மேலாண்மை கல்லூரி இயக்குநர் ஜோ அருண், மாநிலக் கல்லூரி முதல்வர் கல்யாணராமன், எழுத்தாளர்கள் தமிழ் மகன்,கரன் கார்க்கி, அமிர்தம் சூர்யா, நடிகர்கள் ரேகா, மைம் கோபி, பேராசிரியர்கள் சித்ரா, தேவராஜ், தமிழ்மரபு அறக்கட்டளை தலைவர் சுபாஷினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய பலரும்,‘‘பேரறிஞர் அண்ணா குறித்த ‘மாபெரும் தமிழ்க் கனவு', கலைஞர் கருணாநிதி குறித்த ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்' ஆகிய புத்தகங்கள் வெளியிடப்பட்டபோது, தந்தை பெரியார் குறித்த நூலை ஆவலோடு எதிர்பார்த்திருந்தோம்.

அதை பூர்த்தி செய்யும் விதமாக இந்தக் கருத்து கருவூலம் வெளியாகி யுள்ளது’’ என்று குறிப்பிட்டனர். இந்நிகழ்ச்சியை சென்னை புத்தக நிலையத்தின் கோ.ஒளிவண்ணன் ஒருங்கிணைத்திருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x