Published : 23 Dec 2023 06:13 AM
Last Updated : 23 Dec 2023 06:13 AM

திண்ணை | உதயசங்கர் கதைகள் முன் வெளியீட்டுத் திட்டம்

தமிழ்ச் சிறுகதை உலகுக்கு பங்களிப்பு செய்துவரும் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர் உதயசங்கர். தன் சிறார் கதைக்காக பால சாகித்திய அகாடமி விருதுபெற்றவர். அவரது நாற்பதாண்டுக் காலக் கதையுலகம், தமிழ்ச் சிறுகதையின் மாற்றங்களைப் பிரதிபலிக்கும் அம்சம் கொண்டது. அவரது 100 சிறுகதைகள் கெட்டி அட்டைப் பதிப்பில் நூல்வனம் பதிப்பகம் முன்வெளியீட்டுத் திட்டத்தில் கொண்டுவரவுள்ளது. ரூ.1,100 விலையுள்ள இந்தப் பிரதி, முன் வெளியீட்டுத் திட்டத்தில் ரூ.800 (தபால் செலவு உட்பட) சலுகை விலையில் தரவுள்ளனர். இச்சலுகை 10 ஜனவரி 2024 வரை மட்டுமே. தொடர்புக்கு: 9751549992.

பதிப்பாளர் வைகறை மலர் வெளியீடு: பதிப்பாளர் வைகறைவாணன் எழுபதுக்கும் மேற்பட்ட நூல்களை ‘பொன்னி’, ‘சாளரம்’ ஆகிய பதிப்பகங்கள் மூலம் வெளியிட்டிருக்கிறார். வி.பி.சிந்தனின் ‘இந்திய மண்ணில் பொருள் முதல்வாதக் கருத்துகள்’ நூல் அவர் பதிப்பித்தவற்றுள் முக்கியமான ஒன்று. அவரது 74ஆவது பிறந்தநாள் மலர் சென்னைக் கோட்டூர்புரம் தமிழ் இணையக் கல்விக் கழக அரங்கில் நாளை (24.12.23) காலை 9:30 மணி அளவில் நடைபெறவுள்ளது. திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு வெளியிட ஓவியர் ட்ராட்ஸ்கி மருது மலரைப் பெற்றுக்கொள்கிறார். வரலாற்றாசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி, ஆய்வறிஞர் பழ.அதியமான், எழுத்தாளர் செல்வ புவியரசன், ஆ.திருநாகலிங்கம், பொறியாளர் கென்னடி ஆகியோர் கருத்துரை ஆற்றுகிறார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x