

ஆதிநாள் அன்பகத்தி
ஷம்யுக்தாஸ்ரீ சரவணராஜ்
மெளவல் வெளியீடு
விலை: ரூ.120
தொடர்புக்கு: 9787709687
விசித்திர விலங்கு என நாணத்திற்கு உயிர் கொடுக்கும் காதல் கவிதைகளின் தொகுப்பு இது. எல்லாச் சொற்களும் காதலை நோக்கி முடுக்கிவிடப்பட்டுள்ளன.
தணியாது எரியும் காடு
வி.இளவரசி சங்கர்
சாரல் பதிப்பகம்
விலை: ரூ.180
தொடர்புக்கு: 9952188824
தான் வளர்ந்த சூழலை எளிய மொழியில் ஒரு புனைவுபோல் அழகாகச் சொல்லியிருக்கிறார் நூலாசிரியர். அதன் வழி அந்தக் காலகட்ட அரசியலும் இதில் பதிவாகியுள்ளது.
காவேரி ஓரம்
பழ. பாலசுந்தரம்
மலர் புக்ஸ்
விலை: ரூ. 130
தொடர்புக்கு: 9382853646
வாழ்க்கையை வாழ்ந்து கழிக்கும் எளிய மனிதர்களின் கதைகள் இவை. வாசகர்களையும் கூட்டிக்கொண்டு செல்கிறது இதன் எளிய நடை.
அந்தரத்தில் சுழலும் மலர்
கவின்
இடையன் இடைச்சி நூலகம்
விலை: ரூ. 300
தொடர்புக்கு: 9841208152
கவிஞர் தேவதச்சனைப் போல் அன்றாட வாழ்க்கையின் தருணங்களை கவிதைகளாகப் படம் பிடித்திருக்கிறார் கவிஞர். அதுபோல் ஒரு நல்ல ஓசை ஒழுங்கும் இதில் உள்ளது.
இடர் களையாய்
பா.ஏகரசி தினேஷ்
கெளதம் பதிப்பகம்
விலை: ரூ. 140
தொடர்புக்கு: 9444086888
கிராமத்துப் பெண்களின் பிரச்சினைகள், சமூகப் பழக்கமாகிப் போன மீறல்கள் ஆகியவற்றைக் கருப்பொருளாகக் கொண்ட கதைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.