

ஒளிப்பசி
புன்னகை பூ.ஜெயக்குமார்
பொள்ளாச்சி இலக்கிய வட்டம்
விலை: ரூ.100
தொடர்புக்கு: 9095507547
இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகள் அனைத்தும் காட்சி வடிவங்களாக விரிகின்றன. அதன் வழி தன் எண்ணத்தைக் கவிஞர் பகிர்ந்துள்ளார்.
பெரியார்..!
எப்படிப் பெரியார்?
வெற்றிச்செல்வன்
கருஞ்சட்டைப் பதிப்பகம்
விலை: ரூ.150
தொடர்புக்கு: 044 – 2472 6408
தமிழ்நாட்டின் சமூக மாற்றத்துக்கான போராட்டங்களைத் தீரத்துடன் முன்னெடுத்தவர் பெரியார். அவரது பங்களிப்புகளைப் பலவிதங்களில் சொல்லும் நூல் இது.
தமிழ்நாட்டில் சனாதனத் திணிப்பும் எதிர்ப்பும்
சி.இளங்கோ
அலைகள் வெளியீட்டகம்
விலை: ரூ.110
தொடர்புக்கு: 9841775112
சனாதனக் கருத்தாக்கத்தின் தோற்றம், அது பரவிய வரலாற்றை இந்த நூல் விரிவாகச் சொல்கிறது. சான்றுகளுடனான இந்த நூலை ஆய்வுப் பின்புலத்தில் வாசித்துப் பார்க்கலாம்.
கூப்புக்காடு
ஆரா
பாரதி புத்தகாலயம்
விலை: ரூ.200
தொடர்புக்கு: 9498062424
வால்பாறையின் உதிரித் தொழிலாளிகளின் கதை. தேயிலைத் தொழிலை நம்பியிருக்கும் தொழிலாளர்களின் கதையை உயிர்ப்புடன் சொல்லும் நாவல் இது.
போலோ மகாத்மா காந்திக்கு ஜே
க.பன்னீர் செல்வம்
அருள்மொழி பிரசுரம்
விலை: ரூ.110
தொடர்புக்கு: 9500172822
ஆர்க்காட்டின் சிறப்புகளுடன் தொடங்கும் இந்த நூல், ஆர்க்காட்டின் ஆளுமைகளை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.