Published : 10 Dec 2023 04:46 AM
Last Updated : 10 Dec 2023 04:46 AM

‘இந்து தமிழ் திசை’, வர்த்தமானன் பதிப்பகம் சார்பில் மதுரையில் வாசிப்புத் திருவிழா: வாசிப்பு அனுபவம் உன்னத இடத்துக்கு அழைத்து செல்லும் - சாகித்ய அகாடமி விருதாளர் சோ.தர்மன் கருத்து

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் மற்றும் வர்த்தமானன் பதிப்பகம் சார்பில் மதுரை தியாகராசர் கல்லூரியில் நடைபெற்ற வாசிப்புத் திருவிழாவில் பங்கேற்ற வாசகர்கள்.படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை: வாசிப்பு அனுபவம் உன்னத இடத்துக்கு வாசகர்களை அழைத்துச் செல்லும் என சாகித்ய அகாடமி விருதாளர் சோ.தர்மன் தெரி வித்தார்.

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் மற்றும் வர்த்தமானன் பதிப்பகம் சார்பில், வாசிப்பு திருவிழா, மதுரை தெப்பக்குளம் தியாகராசர் கல்லூரி வளாகத்திலுள்ள டாக்டர் ராதா தியாகராசன் அரங்கில் நேற்று நடந்தது.

விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற எழுத்தாளரும், சாகித்ய அகாடமி விருதாளருமான சோ.தர்மன் பேசியதாவது:

நான் 100 ஆண்டுகள் புகழ்பெற்ற நிறுவனத்தில் ஏஐடியுசி தொழிற் சங்கத் தலைவராக நிறுவனத்துக்கு எதிராக, தொழிலாளர்களுக்கு நியாயமான தலைவராக பணியாற்றி னேன். அது தொடர்பாக 14 முறை சிறைக்குச் சென்றுள்ளேன். சிறைச் சாலை என்பது அற்புதமான இடம். ஒவ்வொரு கைதியும் ஒரு நாவல். ஆயுள் கைதியிடம் நான் பேசினால் அவர் அழுவார். வாசிப்பு என் பது வாழ்க்கை அனுபவம் அது உங்களை உன்னதமான இடத் துக்கு அழைத்துச் செல்லும். அந்த அனுபவத்தால்தான் உங்கள் முன் நிற்கிறேன். நான் 10-ம் வகுப்பு கூட படிக்கவில்லை. ஆனால், தமிழகத்திலுள்ள பல கல்லூரிகளில் பேராசிரியராக இருந்திருக் கிறேன்.

நான், கருணாநிதி, ஜெயலலிதா, கே.பழனிசாமி ஆகிய 3 முன்னாள் முதல்வர்களிடம் விருது பெற்றுள்ளேன். எந்த எதிர்பார்ப்பும் இன்றி எழுதுபவன் நான், அதனால் நான் பயணப்படும் பாதை மிகச் சரியானது.

உங்களது கருத்துகளை, எண் ணங்களை எழுதுங்கள். அப்படி நான் முகநூலில் எழுதிய பதிவை மேற்கோள்காட்டி, உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், நீர் நிலைகள் தனி நபருக்கானதல்ல. பறவைகள், கால்நடைகள் தண் ணீர் குடிக்க நீராதாரமாக உள்ளது. அங்கு கண்மாய் நீரை வெளி யேற்றி மீன்பிடிக்கும் ஏலத்தை ரத்து செய்து தீர்ப்பு வழங்கினார்.

இவ்வாறு அவர் பேசினார்.

எழுத்தாளர் ஆத்மார்த்தி பேசிய தாவது: ‘இந்து தமிழ் திசை’ நல்ல எழுத்தாளர்களை அடையாளம் காட்டுகிறது. மொழி எல்லோ ருக்கும் பொது. அதை அடக்கு வோரை அமர வைத்து அழகு பார்க்கிறது. மருந்துகளை விடவும் மயக்கும் ஆதிக்கம் செலுத்த வல்லது எழுத்து. புத்தக வாசிப்பு மூலம் உங்களை அது வேறொரு இடத்துக்குக் கொண்டு செல்லும். இவ்வாறு அவர் பேசினார்.

மதுரை காவல் உதவி ஆணையர் பா.காமாட்சி பேசியதாவது: கிடைத்த வாய்ப்பைப் பயன் படுத்தியதால் இந்த இடத்துக்கு வந்துள்ளேன். 5-ம் வகுப்பு வரை கிராமப் பள்ளியில்தான் படித்தேன். புத்தக வாசிப்பு கிடையாது. திருமணத்துக்குப் பிறகு கிடைத்த இடைவெளியில் செய்தித் தாள்கள் படிப்பதில் தொடங்கி வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தினேன். காவல் பணிக்கான பயிற்சியின்போது, பொன்னியின் செல்வன் 5 பாகத்தையும் படித்து முடித்தேன். பயிற்சியில் இருந்த போது, எனது மகள் ஞாபகம் வரும்போது, வாசிப்பேன். வாசிப்பு எனும் போதைக்கு அடிமையாகி விட்டேன். வாட்ஸ் ஆப், பேஸ் புக் பார்த்தாலும் புத்தகம் வாசிக்கும் போது கிடைக்கும் ஆத்ம திருப்தி வேறு எதிலும் கிடைக்காது. சுற்றி நடக்கும் நிகழ்வுகளை தெரிந்து கொள்ள நாளிதழ்களை தவறாது படிக்கவேண்டும்.தற்போது நிறைய பெற்றோர் தங்களது குழந்தைகளிடம் பேசுவதும், கண்காணிப்பதும் கிடையாது. பிள்ளை களுக்கு பிடித்ததை படிக்க வையுங்கள். குழந்தைகளை நல்ல படியாக வளர்த்தால் எங்களுக்கு வேலை கிடையாது.

இவ்வாறு அவர் பேசினார்.

‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் முதன்மை உதவி ஆசிரியர் ஆர்.ஜெயக்குமார் பேசுகையில், தற்போது ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகரிப்பால் வாசிப்பு பழக்கம் குறைந்து வருகிறது. அதிலிருந்து மீள புத்தக வாசிப்பு அவசியம். அதற்கான முன் னெடுப்புகளை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் செய்துவருவது பொருத்தமான விஷயம். ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் மூலம் அறியப்படாத எழுத்தாளர்களை அறி முகப்படுத்தி வருகிறோம் என்றார்.

முன்னதாக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் மதுரை பதிப்பு செய்தி ஆசிரியர் து.மாயாவதாரன் விழாவில் பங்கேற்றோரை வரவேற்றார். பொது மேலாளர் டி.ராஜ்குமார் நன்றி கூறினார்.

நிகழ்ச்சியை ‘இந்து தமிழ் திசை’யின் முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேசன் தொகுத்து வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தியாகராசர் கல்லூரி டீன் சீனிவாசன், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் விற்பனைப் பிரிவு மதுரை மண்டல முதுநிலை பொதுமேலாளர் எஸ்.வெங்கட சுப்பிரமணியன் மற்றும் ஏராளமான வாசகர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x