

எஸ்.பொன்னுத்துரை
முஸ்லிம்களுடனான உறவும் ஊடாட்டமும்
ஏ.பீர்.முகம்மது
பேஜஸ் புத்தக நிலையம்
விலை: ரூ.350
தொடர்புக்கு: 0094672222574
புகழ்பெற்ற ஈழ எழுத்தாளர்களுள் ஒருவர் எஸ்.பொ. என அழைக்கப்படும் சண்முகம் பொன்னுத்துரை. இவருக்கும் இலங்கை முஸ்லிம் சமூகத்தினருக்குமான நட்பு பற்றிய நூல் இது.
நொய்யல் இன்று
கா.சு.வேலாயுதன்
கதை வட்டம்
விலை: ரூ.240
தொடர்புக்கு: 9994498033
கொங்குப் பகுதியின் முக்கிய ஆறுகளில் ஒன்று நொய்யல். திருப்பூர் சாயப்பட்டறைக் கழிவுகளால் சிதைக்கப்பட்ட நொய்யலின் இன்றைய நிலையைக் காட்டும் நூல் இது.
மணல் பொம்மை
சிறுவர்களுக்கான சிறுகதைகள்
ச.ச.சுபவர்ஷினி
நூல் குடில் பதிப்பகம்
விலை: ரூ.60
தொடர்புக்கு: 9940481276
சிறார்களுக்கான சுவாரசியமூட்டும் கதைகளின் தொகுப்பு இது. சிறார்களின் கற்பனை ஆற்றலைக் கூட்டும் விதத்தில் ஆர்வமூட்டும் எளிய கதைகள் இதில் உள்ளன.
சட்டத்தின் வெளிச்சத்தில் நீதிமன்றத் தீர்ப்புகள்
தொகுப்பு: பெ.தர்மராஜ்
வெற்றிமொழி வெளியீட்டகம்
விலை: ரூ.100
தொடர்புக்கு: 9715168794
நீதிமன்றத் தீர்ப்புகள் குறித்த கட்டுரைகள் அடங்கிய நூல் இது. மார்க்சிய அறிஞர் எஸ்.வி.ராஜதுரை, வழக்கறிஞர் லஜபதிராய் உள்ளிட்ட ஆளுமைகளின் கட்டுரைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.
நாட்டுப்புற இராமாயணங்கள்
கம்பன் சொல்லாத கதைகள்
பேரா. சு.சண்முகசுந்தரம்
காவ்யா பதிப்பகம்
விலை: ரூ.500
தொடர்புக்கு: 9840480232
ராமாயணம் இந்தியாவில் பல வடிவங்களில் பாடப்பட்டும் நிகழ்த்தப்பட்டும் வருகிறது. நாட்டார் வழக்கில் ராமாயணம் எப்படி வெளிப்பட்டுள்ளது என்பதைச் சொல்லும் நூல் இது.