

கொரிய நாட்டுப்புறக் கதைகள்
பல்லவிகுமார்
தமிழ்ப் பல்லவி வெளியீடு
விலை: ரூ.130
தொடர்புக்கு: ரூ.9942347079
இந்தியக் கதை மரபைப் போல் கற்பனை வளம் மிக்கவை கொரிய நாட்டுக் கதைகள். அண்ணனும் தங்கையும் எப்படிச் சூரிய, சந்திரன் ஆனார்கள் என்பதைக் குறித்த முதல் கதை அதற்கு ஓர் உதாரணம்.
கை நழுவும் காலம்
சிற்பி
எழுத்துப் பிரசுரம்
விலை: ரூ.120
தொடர்புக்கு: 8925061999
தமிழின் பிரபலமான கவிஞர் சிற்பியின் புதிய கவிதைகள் இவை. தனிமையில் கவிதைக்காகக் காத்திருத்தல், வந்த கவிதையுடன் உரையாடுதல் என இந்தக் கவிதைகள் அனுபவத்தில் வேர்பிடித்து விரிந்துள்ளன.
அப்பாவின் குதிரை
ஸ்ரீதர் பாரதி
நியூஸ்மேன் பப்ளிகேஷன்ஸ்
விலை: ரூ.100
தொடர்புக்கு: 9080330200
ஸ்ரீதர் பாரதி, தனது அனுபவங்களுக்கு ஒரு மொழியை அளித்துக் கவிதையாக்கி இருக்கிறார். இந்தக் கவிதைகள் அனைத்திலும் உள்ள அனுபவம் தன்னைக் கவிதையாக்க முயன்றிருக்கிறது.
தமிழ் நாட்டுப்புற இயல் ஆய்வுகள்
பெ.சுப்பிரமணியன்
காவ்யா பதிப்பகம்
விலை: ரூ.240
தொடர்புக்கு: 9840480232
கொங்கு நாட்டுத் திருவிழாக்கள், கூத்தும் மரபும், ஒயில் கும்மியும் ஒயிலாட்டமும் எனப் பல்வேறு தலைப்புகள் கீழ் அமைந்த ஆக்கபூவர்மான ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு இது.
நல்லிதய நல்லி
ஆர்.நடராஜன்
பிரெய்ன் பேங்க் வெளியீடு
விலை: ரூ.750
தொடர்புக்கு: 9841036446
பிரபல பட்டாடை விற்பனை நிறுவனத்தின் தலைவரான நல்லி குப்புசாமியின் ஆளுமையைத் துலங்கச் செய்யும் நூல் இது. இதன் வழி அவரது பன்முகத்தையும் ஆசிரியர் நமக்குக் காட்டித்தருகிறார்.