Published : 18 Nov 2023 06:19 AM
Last Updated : 18 Nov 2023 06:19 AM
தேசிய புத்தக வார விழாவை முன்னிட்டு சாகித்திய அகாடமி சென்னைக் கிளை அலுவலகத்தில் 14.11.23 முதல் 20.11.23 வரை காலை 9.30 மணியிலிருந்து மாலை 5.30 மணி வரை புத்தகக் கண்காட்சி நடைபெற்றுவருகிறது. புத்தகக் காட்சி நடைபெறும் இடம்: 443, அண்ணா சாலை, குணா வளாகம், இரண்டாம் தளம், தேனாம்பேட்டை, சென்னை 18.
எழுத்தாளர்களின் ஆவணப் படங்கள்! - தேசிய நூலக வாரத்தை முன்னிட்டு நவம்பர் 14 முதல் 20 வரை பொது நூலகத் துறையின் சென்னை மாநகர நூலக ஆணைக்குழு சார்பாக கலைஞர்கள் - எழுத்தாளர்கள் பற்றிய பன்னாட்டு ஆவணப்பட விழா நடைபெற்றுவருகிறது. சென்னை அண்ணா சாலையிலுள்ள தேவநேயப் பாவாணர் மாவட்ட மைய நூலகத்தில் காலை 10.30 முதல் மாலை 5.30 மணி வரை படங்கள் திரையிடப்பட்டுவருகின்றன. பாரதியார், கு.அழகிரிசாமி, ஜெயகாந்தன், அசோகமித்திரன், வண்ணதாசன் உள்ளிட்ட புகழ்பெற்ற எழுத்தாளர்கள், கலைஞர்களை பற்றிய ஆவணப்படங்களுடன் சர்வதேச எழுத்தாளர்கள் பற்றிய படங்களும் திரையிடப்படுகின்றன.
இத்திரைப்பட விழாவை சென்னை மாநகர நூலக ஆணைக் குழுவின் தலைவர், கவிஞர் மனுஷ்யபுத்திரன் ஏற்பாடுசெய்துள்ளார். ஆவணப்பட இயக்குனர் ஆர்.பி.அமுதன் விழாவை ஒருங்கிணைத்துவருகிறார். இன்று (18.11.23) பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை இந்திரா பார்த்தசாரதி குறித்த ரவிசுப்பிரமணியன் எடுத்த படமும் சுந்தர ராமசாமி குறித்து ஆர்.வி.ரமணியின் ஆவணப்படமும் திரையிடப்படவுள்ளன. அதுபோல் நாளை (19.11.23) பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை மலையாள எழுத்தாளர்கள் வைக்கம் முகம்மது பஷீர், கமலாதாஸ், தமிழ் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் ஆகியோர் குறித்த ஆவணப்படங்கள்
திரையிடப்படவுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT