

பொதியவெற்பன் நூல்கள்
ஆற்றுப்படை மதிப்பீடுகள்
தொகுப்பாசிரியர்: கண.குறிஞ்சி
புதுமலர் பதிப்பகம்
விலை: ரூ.120
தொடர்புக்கு: 94433 07681
பதிப்பாளராக, ஆசிரியராக தமிழ் இலக்கியத்துக்குப் பங்களிப்புசெய்த பொதியவெற்பனின் நூல்கள் குறித்து பேரா. வீ.அரசு, கரு.ஆறுமுகத்தமிழன், கண.குறிஞ்சி, ஜமாலன் உள்ளிட்ட அறிஞர்கள் பலர் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர்.
இனியவை இருபத்தைந்து
இரா.சாந்தகுமார்
சித்தார்த்தன் பதிப்பகம்
விலை: ரூ.100
தொடர்புக்கு: 90040 02346
இன்றைய காலத்துக்குத் தேவையான அறிவுரைகள் பலவற்றைக் கட்டுரையாளர் இந்த நூலில் பகிர்ந்துள்ளார். திறன்பேசியைக் கையாள்வது, சுற்றுச்சூழலைச் சுத்தமாக வைத்துக்கொள்வது போன்றவை சில உதாரணங்கள்.
இஸ்லாத்தில் அமைதி எனும் பண்பாடு
மவ்லானா வஹீதுத்தின் கான்
குட்வேர்ட் புக்ஸ்
தொடர்புக்கு: 97908 53944
இஸ்லாம் புனித நூலான திருகுர்ஆன் அமைதியை வலியுறுத்தும் நூல் என்கிறது இந்த நூல். இந்தப் பிரபஞ்சம் அதனதன் வட்டப் பாதையில் சுற்றுவதைச் சொல்லும் குர் ஆன் வாக்கியத்துடன் இந்த நூல் தொடங்குவது பொருத்தமானது.
நட்சத்திரத்தின் பாதையில்
ஜீவன் பென்னி
தேநீர் பதிப்பகம்
விலை: ரூ.180
தொடர்புக்கு: 90809 09600
கவிஞர் ஜீவன் பென்னியின் அபிப்ராயக் கட்டுரைகளின் தொகுப்பு இது. தேவதச்சன், நகுலன், பிரம்மராஜன் ஆகியோரின் கவிதைகள், பஷீர், தேவிபாரதி உள்ளிட்டோரின் கதைகள் குறித்தும் எழுதியுள்ளார்.
மனித வளம்
ஆரா
சிவகாமி புத்தகாலயம்
விலை: ரூ.90
தொடர்புக்கு: 95516 48732
மனித வளம் நிறைந்த நாடு இந்தியா. இந்தப் பின்னணியில் வாசிக்கப்பட வேண்டிய நூல் இது. மனித வளம் குறித்த முழுமையான ஒரு சித்திரத்தை இந்த நூல் நமக்கு அளிக்கிறது.