Published : 16 Jan 2018 09:03 AM
Last Updated : 16 Jan 2018 09:03 AM

பளிச்: காக்கைக்கூடு

தமிழில் நீண்டகாலமாகவே சுற்றுச்சூழல் நூல்கள் வெளிவந்துகொண்டிருந்தாலும், கடந்த 10 ஆண்டுகளில் நேரடி சுற்றுச்சூழல் நூல்களும் மொழிபெயர்ப்பு நூல்களும் குறிப்பிடத்தக்க அளவில் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. பசுமை இலக்கியம் சார்ந்த நூல்களுக்கான வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் அதேநேரம், இந்த நூல்களை வெளியிட ஒரு சில பதிப்பகங்களே ஆர்வம் காட்டிவருகின்றன. தமிழில் வெளியான சுற்றுச்சூழல் நூல்களைத் தேடி வாங்க வேண்டிய சூழ்நிலையே தற்போது உள்ளது. இந்தப் பின்னணியில் இயற்கை, சுற்றுச்சூழல் நூல்களை இணையம் மூலம் விற்பதற்காக ‘காக்கைக்கூடு’ என்கிற வலைதளத்தைத் தொடங்கியுள்ளார் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜா.செழியன். இந்த வலைதளம் சார்பில் சென்னை புத்தகக் காட்சியில் ஓர் அரங்கும் (109) அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் நூல்கள் அனைத்தும் இந்த அரங்கில் கிடைப்பது,சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் அலைச்சலைக் குறைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

- நேயா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x