உங்களிடம் இருக்கிறதா இந்தப் புத்தகம்?

உங்களிடம் இருக்கிறதா இந்தப் புத்தகம்?
Updated on
1 min read

100 சிறந்த சிறுகதைகள், தொகுப்பு- எஸ்.ராமகிருஷ்ணன், டிஸ்கவரி புக் பேலஸ், (இரண்டு பாகங்கள்), விலை ரூ.800

தமிழின் சிறந்த சிறுகதையாசிரியர்களில் ஒருவரான எஸ்.ராமகிருஷ்ணன் தனது வாசகர்களுக்குப் பரிந்துரைத்த 100 முக்கியமான சிறுகதைகளின் தொகுப்பு இது. நூறாண்டுகளைக் கடந்த தமிழ்ச் சிறுகதையின் உச்சங்களைப் பட்டியலுக்குள் அடக்கிவிட முடியாதுதான். ஆனாலும், புதுமைப்பித்தன் தொடங்கி சந்திரா வரைக்கும் தமிழ்ச் சிறுகதை கடந்து வந்திருக்கும் பாதையைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன். சிறுகதையின் காதலர்களுக்கு இது ஒரு பொக்கிஷம். சிறுகதை எழுத விரும்பும் இளம் எழுத்தாளர்களுக்கு அருமையான வழிகாட்டி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in