

கரிசல் வாசம்
கண்ணன் செல்லிமுத்து
ஏலே பதிப்பகம்
விலை: ரூ.150
தொடர்புக்கு: 99449 92571
வெக்கைக் காற்றை வீசும் வெள்ளந்திப் பூமி இது எனக் கரிசல் காட்டைப் பாட்டால் பாடியிருக்கிறார் கவிஞர். வட்டார மொழியில் அமைந்த சந்தம் மிக்கக் கவிதைகள் இவை.
திரைக்கதைகள்
(நூல்வரிசை 4)
சுப்ரபாரதிமணியன்
நிவேதிதா பதிப்பகம்
விலை: ரூ.140
தொடர்புக்கு: 89393 87296
கவனம் பெற்ற சிறுகதை எழுத்தாளரான சுப்ரபாரதி மணியன் எழுதியிருக்கும் திரைக்கதை ஆக்கம் இது. கூவாகம் பின்னணியை வைத்து இந்தக் கதையை எழுதியிருக்கிறார்.
நிறைமொழி
அருணன்
வசந்தம் வெளியீட்டகம்
விலை: ரூ.100
தொடர்புக்கு: 93848 13030
சொற்சந்தமும் ஆழமான பொருளும் கொண்ட கவிதைகள் இவை. இதற்குள் காதலையும் காத்திரமான அரசியலையும் அருணன் சொல்லியிருக்கிறார்.
பலி ஆடுகள்
கே.ஏ.குணசேகரன்
காவ்யா பதிப்பகம்
விலை: ரூ.120
தொடர்புக்கு: 98404 80232
கே.ஏ.குண சேகரனின் புகழ்பெற்ற நாடகம் இது. ‘நிறப்பிரிகை’யில் வெளிவந்து பரவலான கவனம் பெற்ற இந்தப் படைப்பின் மறுபதிப்பு இது. தமிழ் இலக்கியத்தில் நிகழ்ந்த தலித் அரசியலின் ஒரு சோறு பதம் இது.
சம்பாச் சோறும் சாளை மீனும்
பி.யோகீசுவரன்
நீலா பதிப்பகம்
விலை: ரூ.175
தொடர்புக்கு: 9498419245
எளிய பின்னணி கொண்ட இருவரின் காதல் கதை இது. இந்தக் காதலுக்கு இடையில் சாதியும் பணமும் குறுக்கிடுகின்றன. அதைக் காதல் எப்படி எதிர்கொண்டது என்பதை இந்நாவல் சித்தரிக்கிறது.