Last Updated : 17 Jan, 2018 11:27 AM

 

Published : 17 Jan 2018 11:27 AM
Last Updated : 17 Jan 2018 11:27 AM

சென்னை யாருடைய நகரம்?

செ

ன்னை யாருடைய நகரம் என்கிற கேள்வி ‘தி இந்து லிட் ஃபார் லைஃப்’ இலக்கிய விழாவின் தமிழ் அமர்வில் எழுப்பப்பட்டது.

சென்னை சேத்துப்பட்டில் இருக்கும் லேடி ஆண்டாள் பள்ளி வளாகத்தில் ஜனவரி 14-ம் தேதி தொடங்கி 3 நாட்களுக்கு இந்த விழா நடைபெற்றது.

மோடியின் பதில் என்ன?

‘நிலத்துக்கான உரிமை, வாழ்க்கைக்கான உரிமை’ என்ற தலைப்பில் நடைபெற்ற அமர்வில் குஜராத் வட்காம் சட்டப்பேரவை உறுப்பினரும், சமூகச் செயல்பாட்டாளருமான ஜிக்னேஷ் மேவானி, பேராசிரியர் சந்தன் கவுடாவுடன் கலந்துரையாடி னார்.

“இந்த அரசு ‘கோமாதா’, ‘பாரத் மாதா கீ ஜெய்’ போன்ற வார்த்தை ஜாலங்களை வைத்து மக்களிடம் செயற்கையான எதிரியை உருவாக்கி அரசியல் செய்கிறது. மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதைப் பற்றி கண்டுகொள்வதில்லை. நாட்டில் இருக்கும் 36,000 மருத்துவமனைகளில் 2 லட்சம் மருத்துவர்கள் பணியிடம் காலியாக இருக்கிறது. பள்ளிகளில் 10 லட்சம் ஆசிரியர்கள் பணியிடம் காலியாக இருக்கிறது. இதைப் பற்றியெல்லாம் பிரதமர் மோடி கண்டுகொள்வதில்லை. அவர் சலிப்புக்குரிய மனிதராக மாறிவருகிறார். 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கப்போவதாகத் தேர் தல் வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்தார். அதற்காக இதுவரை 10 யோசனைகளைக்கூட அவரால் உருவாக்க முடியவில்லை.

பெட்ரோல், டீசல், பருப்பு விலையேற்றம் பற்றி கேள்வி எழுப்பினால், அதற்கும் பாகிஸ்தானே காரணம் என்று மோடி சொன்னாலும் சொல்வார்” என்றார் ஜிக்னேஷ் மேவானி.

கடந்த ஆண்டுபோலவே, இந்த ஆண்டும் ‘தி இந்து லிட் ஃபார் லைஃப்’ இலக்கிய விழாவில் தமிழ் அமர்வுகளும் இடம்பெற்றிருந்தன.

‘வடக்கே செல்வோம்: சென்னை யாருடைய நகரம்’ என்ற தலைப்பில் நடைபெற்ற அமர்வில் எழுத்தாளர்கள்ஜெ.கவுதம சன்னாவும், கரன் கார்க்கியும் உரையாடினர்.

“சென்னையின் உழைக்கும் மக்களின் குறியீடுகளில் ஒன்றான கைக்குட்டை, தமிழ்த் திரைப்படங்களில் ரவுடிகளின் குறியீடாக மாற்றப்பட்டிருக்கிறது. கிராமங்களில் இருந்து வருபவர்களை ஏமாற்றுபவர்களாக மட்டுமே சென்னை மக்கள் இத்தனை காலமாக தவறாக சித்தரிக்கப்பட்டு வந்துள்ளனர். இந்தச் சித்தரிப்பில் எள்ளளவும் உண்மை இல்லை. இந்தப் பகுதியில்தான் மூன்று உலக கேரம் சாம்பியன்களும், மிகச் சிறந்த கால்பந்து வீரர்களும், நவீன மேற்கத்திய நடனக் கலைஞர்களும், பாடகர்களும், ஓவியர்களும் உருவாகி இருக்கிறார்கள். சிங்காரச் சென்னையை உருவாக்குகிறோம் என்று, சென்னையின் பூர்வகுடி மக்கள் நகரத்துக்கு வெளியே தூக்கி எறியப்பட்டுள்ளனர். இது மனசாட்சியற்ற செயல்” என்றார் கவுதம சன்னா.

தொடர்ந்து பேசிய கரன் கார்க்கி, “வட சென்னை, தென் சென்னை என்று பிரித்துப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. இந்நகரத்தின் பூர்வகுடி மக்கள் இந்த நகரத்தைப் பிரித்துப் பார்க்கவில்லை. அவர்கள் அன்பானவர்கள். இன்று வட சென்னை என்று அழைக்கப்படும் பகுதியில்தான் சென்னையின் பண் பாடு காப்பாற்றப்பட்டுவருகிறது. சென்னை பூர்வகுடிகளின் அடையாளம் அழிக்கப்பட்டுள்ளது” என்றார்.

அத்துடன், ‘புதிய தமிழ் எழுத்து எவ்வளவு அவலமாக இருக்கிறது? ஏன்?’ என்ற தலைப்பில் நடைபெற்ற தமிழ் அமர்வில் எழுத்தாளர்கள் லஷ்மி சரவணக்குமார், சரவணன் சந்திரன் கலந்துரையாடினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x