

தாஃப்லே ஆலம் பாதுஷா
நாகூர் ரூமி
கிழக்கு வெளியீடுகள்
விலை: ரூ.110
தொடர்புக்கு: 044 42009603
பதினொன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த நத்ஹர் வலி என்கிற புனிதரைக் குறித்த நூல் இது. சோழ குல இளவரசி ஒருவர் இவரது வளர்ப்பு மகள் என்னும் அரிய தகவலை இந்நூல் பகிர்கிறது.
எழுமின் அன்பே
வெ.மாதவன் அதிகன்
வேரல் புக்ஸ்
விலை: ரூ.130
தொடர்புக்கு: 9578764322
காதல், ஒடுக்கமுறை, அரசியல் எனப் பல விதமான கருப்பொருள்கள் கொண்ட தொகுப்பு இது. நவீன கவிதையின் புழங்குசொற்களைக் கொண்டு எடுத்துக்கொண்ட பொருளைச் சரமாக்கியிருக்கிறார் கவிஞர்.
சமற்கிருதம் செம்மொழியல்ல
(ப.மருதநாயகம் ஆய்வுரை)
இலக்குவனார் திருவள்ளுவன்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்,.
விலை: ரூ.100
தொடர்புக்கு: 044 48601884
தமிழ், உயர்தனிச் செம்மொழியாகத் திகழ்வது எப்படி என ஆய்வறிஞர் இதில் எடுத்தியம்புகிறார். உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரை இது.
புதுவை நாட்டுப்புறவியல் ஓர் அறிமுகம்
ஆ.திருநாகலிங்கம்
செல்வி பதிப்பகம்
விலை: ரூ.275
தொடர்புக்கு: 9442355573
புதுவையின் நாட்டார் கலைகள், கதைகள், பாடல்கள் எனப் பலவற்றைப் பற்றிய முழுமையான தொகுப்பு இது. இதன் வழி அந்தப் பகுதியின் வாழ்க்கையும் பண்பாடும் வெளிப்பட்டுள்ளது.
கப்பலோட்டிய தமிழனின்பன்முக ஆளுமை
கண.குறிஞ்சி
சரோஜினி பதிப்பகம்
விலை: ரூ.100
தொடர்புக்கு: 6374832622
வ.உ.சிதம்பரனாரின் பன்முக ஆளுமையை வெளிப்படுத்தும் வகையில் இந்த நூல் தொகுக்கப்பட்டுள்ளது. வ.உ.சி. குறித்த பாரதி, பாரதிதாசன், சுத்தானந்தபாரதி, தமிழ் ஒளி உள்ளிட்டோரின் கவிதைகளும் தொகுக்கப்பட்டுள்ளன.