

40+ மாற்றம்
வள்ளியம்மை அருணாச்சலம்
சில்வர்ஃபிஷ் வெளியீடு
விலை: ரூ.220
தொடர்புக்கு: 7305910955
நம்முடைய பிராயம் நமது சுபாவத்தில் சில மாற்றங்களைக் கொண்டுவரும். 40 வயதுகளில் வரும் மாற்றம் முக்கியமானது. அதைப் பற்றி நூலாசிரியர் இதில் விவரிக்கிறார்.
குறள் கூறும் குறுஞ்செய்தி
பொதட்டூர் புவியரசன்
அறிவுச்சுடர் பதிப்பகம்
விலை: ரூ.80
தொடர்புக்கு: 9443484995
நூலாசிரியர் தன் சொந்த அனுபவத்தைச் சுவாரசியமான மொழியில் பகிர்ந்து, அதன் வழி கற்ற பாடத்தைக் குறளுடன் இணைத்து இந்தத் தொகுப்பில் விளம்பியுள்ளார்.
நித்தம் சிரித்து யுத்தம் செய்யடி
ஜெ.விஜயாராணி ஐ.ஏ.எஸ்.
வசந்தா பதிப்பகம்
விலை: ரூ.180
தொடர்புக்கு: 044 22530954
பெண்களை மையப்படுத்திய ஐந்து சிறுகதைகளின் தொகுப்பு இது. அனுபவங்களின் உந்துதலால் எழுதப்பட்ட முனைப்பு, வாசிப்பு உணர்வை அளிக்கக்கூடியதாக இருக்கிறது.
1975 எமர்ஜென்சி நெருக்கடி
நிலைப் பிரகடனம்
ஆர்.ராதாகிருஷ்ணன்
சுவாசம் பதிப்பகம்
விலை: ரூ.240
தொடர்புக்கு: 8148066645
இந்திய அரசியலில் முக்கியமான விளைவுகளை ஏற்படுத்திய காலக்கட்டம் நெருக்கடி நிலைக் காலம். அக்காலத்தைப் பலவிதங்களில் பதிவுசெய்யும் நூல் இது.
ஆணின் அழகும் ஆளுமையும்
த.ஜான்சிபால்ராஜ்
எழிலினி பதிப்பகம்
விலை: ரூ.200
தொடர்புக்கு: 9840696574
பெண்கள் சமத்துவத்தை முன்னிறுத்தும் எழுத்துகள் இவை. ஆண் பிள்ளை மோகம், பெண் உடல் போக வஸ்துவாகப் பார்க்கப்படுவது எனப் பல விஷயங்கள் குறித்து இந்நூலில் பேசப்பட்டுள்ளது.