

தானா எழுதும் பேனா
(தொழில்நுட்பக் கட்டுரைகள்)
என்.சொக்கன்
ஸ்பெசிபிக்ஸ் பதிப்பகம்
விலை: ரூ.150
தொடர்புக்கு: 8925061999
இணையம், தொழில்நுட்பம் தொடர்பான பல கேள்விகளுக்கு நூலாசிரியர் இதில் பதில் சொல்லியிருக்கிறார்.
திருக்குறள் சிறுகதைகள்
ஹரணி
அகழ் பதிப்பகம்
விலை: ரூ.100
தொடர்புக்கு: 95005 98136
திருக்குறள் பகரும் அறத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட பத்து கதைகளின் தொகுப்பு. எளிமையான விவரிப்பில் கதைகளைச் சொல்லியிருக்கிறார் நூலாசிரியர்.
ஈழத்துத் தமிழ்க் கிறிஸ்தவ இலக்கியம்
ஹறோசனா ஜெ.
குமரன் புத்தக இல்லம்
விலை: ரூ.170
தொடர்புக்கு: 9444808941
இலங்கையின் ஈழத் தமிழ் இலக்கியம் தனித்துவம் கொண்டது. அதில் கிறிஸ்துவம் உண்டாக்கிய விளைவும் தனித்துவமிக்கது. அதை இந்நூல் விளக்குகிறது.
முகங்கள் அறிவோம்
குமரி ஆனந்தன்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
விலை: ரூ.165
தொடர்புக்கு: 044 26251968
முகம் மனதைக் காட்டும் கண்ணாடி என்பர். இந்நூலில் நூலாசிரியர் தான் பார்த்த முகங்களைப் பொருள்பட விவரித்திருக்கிறார். வித்தியாசமான முயற்சி இந்நூல்.