நூல் வரிசை

நூல் வரிசை
Updated on
2 min read

காணாமல் போனவர்கள்
சண் தவராஜா

இனிய நந்தவனம் பதிப்பகம்
விலை: ரூ.150
தொடர்புக்கு: 94432 84823

இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளில் நம் வாழ்க்கையில் இயல்பாகச் சந்தித்த மனிதர்களிடம் உள்ள ஏதோ ஓர் அம்சத்தைப் பார்க்க முடிகிறது. எளிய மொழியில் மனித மனங்களை எழுதிப் பார்த்திருக்கிறார் நூலாசிரியர்.

தமிழரின் அளவை முறைகளும் கணக்குப் புதிர்களும்
பழ.சபாரெத்தினம்

மறத்தி மறவன் அறக்கட்டளை
விலை: ரூ.200
தொடர்புக்கு: 87600 63363

தமிழர்களின் அளவை முறைகளை மிக எளிய முறையில் இந்நூல் ஆசிரியர் தெளிவுபடச் சொல்லியிருக்கிறார். சுடோகு கணக்குப் புதிரை இரண்டாம் பகுதியில் எழுத்துகள் கொண்டு உருவாக்கிக் காண்பித்துள்ளார்.

வாழ்ந்து காட்டியவர்கள்
கே.சந்திரசேகரன்

பழனியப்பா பிரதர்ஸ் வெளியீடு
விலை: ரூ.275
தொடர்புக்கு: 044 28132863

மகாத்மா காந்தி, கார்ல் மார்க்ஸ், நேரு என சமூகத்துக்கு முன்னுதாரணமாக வாழ்ந்துகாட்டியவர்கள் குறித்து இந்நூலில் விரிவாக கே.சந்திரசேகர் எழுதியுள்ளார்.

பாசப் பறவைகள்
சோ.பரமசிவம்

நியூஸ்மேன் பப்ளி
கேஷன்ஸ்
விலை: ரூ.150
தொடர்புக்கு: 90803 30200

இத்தொகுப்பில் உள்ள 13 சிறுகதைகளும் ஓர் அறத்தைச் சொல்பவை. சமூகத்துக்கு நல்ல விஷயங்களைச் சொல்லும் பொருட்டுத் தன் கதைகளை நூலாசிரியர் உருவாக்கியுள்ளார்.

செயற்கரியது எதுவும் இல்லை
மருதம் ராஜசேகர்

வைகறை பதிப்பகம்
விலை: ரூ.80
தொடர்புக்கு: 0451 2430464

வாழ்க்கைக்குத் தேவையான நல்ல சிந்தனைகளைப் போதிக்கும் புத்தகம் இது. இயற்கை வளங்களைப் பாதுகாப்பது, பணத்துக்காக வாழ்க்கையைத் தொலைக்கக் கூடாது என்பது போன்ற சிந்தனைகளை இந்தப் புத்தகம் பேசுகிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in