Published : 23 Dec 2017 09:26 AM
Last Updated : 23 Dec 2017 09:26 AM

தொடுகறி: ந.முத்துசாமியின் ‘பிரஹன்னளை’!

ந.முத்துசாமியின்

‘பிரஹன்னளை’!

கூ

த்துப்பட்டறை நிறுவனர்களில் ஒருவரும் சிறந்த தமிழ்ச் சிறுகதையாசிரியர்களில் ஒருவருமான ந.முத்துசாமி எழுதி இயக்கிய ‘பிரஹன்னளை’ நாடகம் சென்னை பெசண்ட் நகர் எலியட் பீச் சாலையில் தி ஸ்பேசஸ் அரங்கில் நடைபெறஉள்ளது. மகாபாரதத்தில் பொதுவாக அதிகம் அறியப்படாத பெண்கதாபாத்திரமான பிரஹன்னளையை மையமாகக் கொண்ட நாடகம் இது. பாண்டவரின் வனவாசத்தில் நிகழும் கதை இது. இன்றும் (23-12-2017), நாளையும் (24-12-2017) மாலை ஏழு மணிக்கு இந்த நாடகம் நடைபெறுகிறது. தொடர்புக்கு: 044-65373633.

வாசகசாலை விருதுகள்!

ந்த ஆண்டுக்கான ‘வாசகசாலை தமிழ் இலக்கிய விருதுகள்’ அறிவிக்கப்பட்டிருக்கின்றன. கரன் கார்க்கியின் ‘ஒற்றைப் பல்’ நாவலுக்கும், நரனின் ‘கேசம்’ சிறுகதைத் தொகுப்புக்கும், மு.ஆனந்தனின் ‘யுகங்களின் புளிப்பு நாவுகள்’ கவிதைத் தொகுப்புக்கும் களந்தை பீர்முகம்மதுவின் ‘பாதுகாக்கப்பட்ட துயரம்’ கட்டுரைத் தொகுப்புக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. சிறந்த அறிமுக எழுத்தாளராக சுரேஷ் பிரதீப் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். விருது நிகழ்வு இன்று (23.12.17) மதியம் 3 மணி அளவில், தியாகராயர் நகர் தக்கர் பாபா வித்யாலயா பள்ளி அரங்கில் நடைபெறுகிறது. விருதாளர்களுடன் எழுத்தாளர்கள் பிரபஞ்சன், பாரதி கிருஷ்ணகுமார், இயக்குநர் மீரா கதிரவன் ஆகியோரும் இந்த நிகழ்வைச் சிறப்பிக்கவுள்ளார்கள். விருதாளர்களுக்கு வாழ்த்துகள்! தொடர்புக்கு: 9942633833

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x