திண்ணை: ஈரோடு தமிழன்பன் 90

திண்ணை: ஈரோடு தமிழன்பன் 90
Updated on
2 min read

கவிஞர் ஈரோடு தமிழன்பனின் 90ஆவது அகவையை முன்னிட்டு, அவரைச் சிறப்பிக்கும் நிகழ்வை விழிகள் பதிப்பகம் ஒருங்கிணைக்கிறது. வரும் வியாழன் அன்று (28.09.23) மாலை 3 மணி அளவில் கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ் இணையக் கல்விக் கழக அரங்கத்தில் இந்த நிகழ்வு நடைபெற உள்ளது. கவிஞர்கள் யுகபாரதி, கபிலன், அப்துல் ரசாக், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், வழக்கறிஞர் சிகரம் செந்தில்நாதன், பேரா.ய.மணிகண்டன் உள்ளிட்ட பலர் பேச உள்ளனர். நிகழ்வில் தமிழன்பன் குறித்த ஆவணப்படமும் திரையிடப்பட உள்ளது. தொடர்புக்கு: 94444 45555

தீபச்செல்வனின் நூல் சிங்களத்தில்… ஈழக் கவிஞர் தீபச்செல்வன் எழுதிய முதல் கவிதை நூலான ‘பதுங்கு குழியில் பிறந்த குழந்தை’ தொகுப்பு சிங்களத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு, எதிர்வரும் இலங்கை புத்தகக் காட்சியில் வெளியாக உள்ளது.

அனுசா சிவலிங்கம் இந்நூலை சிங்களத்தில் மொழியாக்கம் செய்துள்ளார். நைன் பப்ளிசிங் என்ற சிங்களப் பதிப்பகம் நூலை வெளியிட உள்ளது.

கு.அழகிரிசாமி நூற்றாண்டு நிறைவு: கு.அழகிரிசாமியின் நூற்றாண்டு நிறைவு விழா, நாளை (24.09.23) மாலை 5 மணி அளவில் டிஸ்கவரி புக் பேலஸ், பிரபஞ்சன் அரங்கில் நடைபெற உள்ளது. ஆய்வறிஞர் பழ.அதியமான், விமர்சகர் முருகேசபாண்டியன், பேராசிரியர் சத்தியப்பெருமாள் பாலுசாமி உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர்.

கு.அழகிரிசாமி குறித்த ஆவணப்படம் திரையிடப்பட உள்ளது. தொடர்புக்கு: 99404 46650. அறச்சலூரில் குக்கூ காட்டுப்பள்ளி சார்பில் கு.அழகிரிசாமி நூற்றாண்டு பள்ளி நூலகம் திறப்பு விழா இன்று (23.09.23) 9 மணி அளவில் நடைபெறவுள்ளது. தொடர்புக்கு: 98438 70059.

நாவல் முன் வெளியீட்டுத் திட்டம்: ஒரு கடலோடியாக நூலாசிரியரின் 25 ஆண்டு காலக் கடல் பயண அனுபவங்களைக் குறித்த நாவல் இது. ஆசி என்ற பெயரில் எழுதும் அசோகன், ஓர் ஆப்ரிக்க நாட்டின் பகுதியை நமக்குக் காட்சியாக்கியிருக்கிறார். அதிகாரத்தின் முகத்தை இந்த நாவல் எளிய மொழியில் சித்தரித்துள்ளது. இந்நாவலைப் புலம் பதிப்பகம் முன் வெளியீட்டுத் திட்டத்தில் வெளியிடுகிறது. ரூ.1,200 விலையுள்ள இந்த நாவல், ரூ.750க்கு (தபால் செலவு உள்பட) விற்கப்பட உள்ளது. தொடர்புக்கு: 98406 03499

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in