

கடியலூர் உருத்திரங் கண்ணனாரின்
பெரும்பாணாற்றுப்படை ஆய்வுரை
ம.திருமலை
செல்லப்பா பதிப்பகம்
விலை: ரூ.250
தொடர்புக்கு: 9942176893
பத்துப்பாட்டுள் ஆற்றுப்படையாக அமைந்த ஐந்தினுள் பெரும்பாணாற்றுப்படையின் அமைப்பையும் சிறப்பையும் இந்நூலில் பேரா.திருமலை தெளிவாகத் தந்திருக்கிறார்.
பண்டிகையும் பலியும்
பி.டி.லலிதா நாயக் (தமிழில்: ஜெயந்தி கி, க.மலர்விழி)
ஜெய்கிரி பதிப்பகம்
விலை: ரூ.150
தொடர்புக்கு: 8643842772
சன்னு என்னும் தொழிலாளி, பண்டிகைக்காக முதலாளியிடம் கடன் வாங்குகிறார். அதற்காக அவர் அடிமையாக ஆகவேண்டியதன் துயரத்தைச் சொல்லும் கதை இது. எளிய மொழியில் தெளிவுற ஒரு வாழ்க்கைச் சித்திரத்தை இதில் லலிதா வடித்துள்ளார்.
செதுக்குங்கள் செம்மைப்பட
பெற்றோர்களுக்கான வழிகாட்டி
டாக்டர் உமாராஜா
சங்கர் பதிப்பகம்
விலை: ரூ.185
தொடர்புக்கு: 9444191256
குழந்தைகளைப் புரிந்துகொள்வது பற்றியும் அவர்களுக்குள் ஓர் ஆளுமைப் பண்பை உருவாக்குவது பற்றியுமான பல ஆலோசனைகளை இந்த நூல் வழங்குகிறது. பெற்றோர்கள், குழந்தைகளைக் கையாள்வது குறித்து தெளிவாக விளக்குகிறது இந்நூல்.
மலையில் ஒரு மாளிகை
(சிறார் நாவல்)
முகிலை இராசபாண்டியன்
முக்கடல் பதிப்பகம்
விலை: ரூ.200
தொடர்புக்கு: 9444365642
மேற்கு மலைத் தொடர் பகுதியில், சமூக விரோதிகளைப் பிடிக்க சிறுவர்கள் இருவர் காவல் துறைக்கு உதவுகிறார்கள். இந்தச் சிறுவர்களின் அழகான உலகத்தை நூலாசிரியர் விவரித்துள்ளார்.
செயல் உன்னை உயர்த்தும்
மயிலாடுதுறை இளையபாரதி
கவி ஓவியா பதிப்பகம்
விலை: 140
தொடர்புக்கு: 9840912010
நாம் அறிந்தோ அறியாமலோ நம் எண்ணங்களின் வெளிப்பாடு நம்மையும் நம்மைச் சார்ந்தோரையும் பாதிக்கின்றன. அந்த எண்ணங்களைக் கையாள்வதற்கான யோசனைகளை இந்நூல் விவரிக்கிறது.