நூல் வரிசை

நூல் வரிசை
Updated on
2 min read

ஏ.பி.பெரியசாமி புலவர் சிந்தனைகள்
முனைவர் பெ.விஜயகுமார்

பாபாசாகேப் அம்பேத்கர் கலை இலக்கியச் சங்கம்
விலை: ரூ.500
தொடர்புக்கு: 9884744460

பெளத்த மறுமலர்ச்சியின் முன்னோடி ஏ.பி.பெரியசாமிப் புலவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. பெளத்தம் உள்ளிட்ட பல பொருள்களில் அமைந்த கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன.

ராமாநுஜர்
இந்திரா பார்த்தசாரதி

காலச்சுவடு பதிப்பகம்
விலை: ரூ.190
தொடர்புக்கு: 04652 278525

எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியின் புகழ்பெற்ற நாடகம் இது. துறவியான ராமாநுஜரைப் புரிந்துகொள்ள இந்தப் பிரதி உதவும். இது ‘சரஸ்வதி சம்மன்’ விருது பெற்ற ஆக்கமாகும்.

ஆதனின் நீலி
சி.வெற்றிவேல்

வானதி பதிப்பகம்
விலை: ரூ.125
தொடர்புக்கு: 044 24342810

ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காதல் கதை இது. அஞ்சு நாட்டுப் பள்ளத்தாக்கின் ஆதன் - நீலி இருவருக்கும் இடையிலான
கதை.

இயற்கையோடு இயைந்த அறிவியல்
கு.வை.பாலசுப்பிரமணியன்

பாரதி புத்தகாலயம்
விலை: ரூ.180
தொடர்புக்கு: 044 24332424

அறிவியலின் இயல்புகளை அழகான மொழியில் நூலாசிரியர் எழுதியுள்ளார். சிறார் மட்டுமல்லாது, பெரியவர்களும் வாசிக்கக்கூடிய சுவாரசியமும் தகவலும் இந்நூலில் விரவிக்கிடக்கின்றன.

எஸ்.எஸ்.தென்னரசு சிறுகதைகள்
எஸ்.எஸ்.தென்னரசு

நக்கீரன் பதிப்பகம்
விலை: ரூ.350
தொடர்புக்கு: 044 43993000

திராவிட இயக்க இலக்கியவாதிகளில் குறிப்பிடத்தகுந்தவர் எஸ்.எஸ்.தென்னரசு. சுவாரசியமும் சமூக அக்கறையும் கொண்ட இவரது கதைகளின் தொகுப்பு இது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in