திண்ணை: மொழிபெயர்ப்பாளர்களுக்கு அங்கீகாரம்

திண்ணை: மொழிபெயர்ப்பாளர்களுக்கு அங்கீகாரம்
Updated on
1 min read

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள சர்வதேச மொழிபெயர்ப்பாளர் சந்திப்பில், இந்தியா சார்பில் கலந்துகொள்ள மூத்த மொழிபெயர்ப்பாளர் என்ற முறையில் சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகரும் இளம் மொழிபெயர்ப்பாளர் என்ற முறையில் அ.புகழேந்தியும் பிரெஞ்சு அரசால் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். இந்த மாநாட்டில் ஜெர்மனி, பிரேசில், சீனா, அமெரிக்கா, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்லோவேனியா, துருக்கி, உக்ரேன் நாட்டு மொழிபெயர்ப்பாளர்களும் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

எம்.கோபாலகிருஷ்ணன் படைப்புலகம்

தமிழின் விசேஷமான எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன். ‘மணல் கடிகை’, ‘மனைமாட்சி’ ஆகியவை இவரது குறிப்பிடத்தகுந்த ஆக்கங்கள். இவர் சூத்ரதாரி என்கிற பெயரில் கவிதைகளும் எழுதியுள்ளார். இவரது படைப்புகள் குறித்த ஒரு நாள் கருத்தரங்கு இன்று (03.09.23) சென்னை மயிலாப்பூர் துவாரகா காலனி, வெங்கடாசலம் தெருவில் நிவேதனம் அரங்கில் நடைபெற உள்ளது. காலை 10 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும் இந்த விழாவில் மெய்யியலாளர் கரு.ஆறுமுகத்தமிழன், கவிஞர் க.மோகனரங்கன், எழுத்தாளர்கள் ஜா.ராஜகோபாலன், செல்வ புவியரசன், செல்வேந்திரன், அ.வெண்ணிலா, செந்தில் ஜெகன்னாதன், பரிசல் கிருஷ்ணா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பேச உள்ளனர். ஆகுதி பதிப்பகம் இந்நிகழ்வை ஒருங்கிணைக்கிறது. தொடர்புக்கு: 8939745030

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in