நூல் நயம்: கலைஞனின் சுதந்திரமும் வாசகனின் சுதந்திரமும்

நூல் நயம்: கலைஞனின் சுதந்திரமும் வாசகனின் சுதந்திரமும்
Updated on
2 min read

ஓவியர் சந்ரு தமிழில் புரட்சிகரமான கலைஞர். கலை என்கிற புனிதத்துவத்துக்கு எதிராக எளிமையான மரப்பாச்சிப் பொம்மைகளிலும் கலையைக் கண்டுகொள்பவர். சமூகம், அரசியல், பண்பாடு குறித்துத் திடமான அபிப்ராயம் உள்ளவர். தனது கருத்துகளைத் தனது படைப்புகளிலும் வெளிப்படுத்துபவர் சந்ரு.

அவரது சமகாலத்தையும் சமூகத்தையும் அரசியல் பின்னணியுடன் வெளிப்படுத்தும் ஓவியங்களின் தொகுப்பு இந்நூல். ஓவியங்கள் வரைந்தபோது அது குறித்து சந்ரு எழுதிய குறிப்புகள் அவரது கையெழுத்திலேயே வெளியிடப்பட்டுள்ளன. ‘சாதி கெட்ட கலை, கெட்ட சாதி கலை, கலை கெட்ட சாதி’ என்கிற தலைப்பில் இந்தப் புத்தகம் வெளிவந்துள்ளது.

புத்தகத்துக்குப் பொதுவாகக் கடைப்பிடிக்கப்படும் இலக்கணமும் இதில் மீறப்பட்டுள்ளது. இது முழுமையான கலை வடிவமாக வெளிப்பட்டுள்ளது. இந்த ஓவியங்கள்வழி சந்ரு சுதந்திரத்துடன் தன்னை வெளிப்படுத்தியுள்ளார். சென்னை ஓவிய இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான ராய் செளத்ரி குறித்த சந்ருவின் அபிப்ராயம் இதில் உள்ளது. ‘கலை பயின்றவர்களே அக்மார்க் குத்தப்பட்ட ஓவியர்கள்.

அவ்வகையில், ராய் செளத்ரிக்குச் சிலை வடிக்க மகாத்மா காந்தி, திருவாங்கூர் மகாராஜா, உழைப்பாளி, பசியால் வாடும் கிழவிகள் தோற்றம் தேவைப்பட்டன’ என்கிறார். இந்தக் குறிப்புக்கான ஓவியத்தின் தலைப்பு ‘உலகத் தரம் பதுமைகள்’ எனத் தலைப்பிட்டுள்ளார். இதில் மைக்கேல் ஏஞ்சலோ, அகஸ்டி ரொடின், ராய் செளத்ரி ஆகியோரின் உருவச் சித்தரிப்பு, விக்டோரியா மகாராணி, சித்திரைத் திருநாள் மகாராஜா, காந்தி, வறுமைச் சின்னம் ஆகிய சித்தரிப்புகளை வரைந்துள்ளார். இந்த ஒரு படைப்பை இந்தத் தொகுப்புக்கான ஒரு பதம் எனலாம். - ஜெய்

சாதி கெட்ட கலை, கெட்ட சாதி கலை, கலை கெட்ட சாதி
சந்ரு

படிகம் பதிப்பகம்
விலை: ரூ.350
தொடர்புக்கு: 98408 48681

மலையகத் தமிழர் வரலாறு; இலங்கையின் ஈழத் தமிழர்கள் குறித்துப் பேசப்படும் அளவுக்கு மலையகத் தமிழர்கள் குறித்து அதிகம் பேசப்படுவதில்லை. இலங்கைத் தமிழர்களிலேயே மிகவும் மோசமான நிலையில் இருப்பவர்கள் மலையகத் தமிழர்கள்தாம் என்று கூறப்படுவது உண்டு. இலங்கையில் இருக்கும் பிரஜா உரிமைச் சட்டத்தால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் இவர்கள். 1911ஆம் ஆண்டில் இவர்களை ‘இந்தியத் தமிழர்கள்’ என்று இலங்கை அரசு சட்டபூர்வமாக அறிவித்துவிட்டது.

இதனால் இலங்கைத் தமிழர்கள் என்கிற உரிமையை இழந்து, ‘இந்தியாவிலிருந்து கூலிக்கு வந்தவர்கள். இவர்களுக்கு இந்த நாட்டில் எந்த உரிமையும் இல்லை’ என்கிற நிலை உருவாகிவிட்டது. இன்றளவும் கிட்டத்தட்ட அதே நிலைதான். 40 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இந்த நூல், இரண்டாம் பதிப்பாக வெளிவந்திருக்கிறது. இது ஒரு இனக் குழுவைக் குறித்த வரலாற்று ஆவணம் எனலாம். - எஸ். சுஜாதா

இருபதாம் நூற்றாண்டின்
நவீன அடிமைத்தனம்

பி.ஏ.காதர்
சமூகம் இயல் பதிப்பகம்
விலை: ரூ.275
தொடர்புக்கு: 044 - 78172 62980

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in