

நாம் ஏற்கெனவே தீர்மானம் செய்து வைத்துள்ள கதைகளையும் கதாபாத்திரங்களையும் புதிய தரிசனத்துடன் அறிமுகப்படுத்தும்போது, அது புதிய வாசிப்பு அனுபவமாக மாறிவிடுகிறது. ‘கவனிக்கப்படாத காவியப் பூக்கள்’ என்கிற இந்தப் புத்தகத்தில் வாசிக்கக் கிடைக்கும் 22 பெண் கதாபாத்திரங்களின் உள்ளத்தில் ஒலித்த உரிமைக் குரலை, ஓர் ஆண் எழுத்தாளர் இக்கதைகளின் வழியாக வெளிப்படுத்த முனைந்திருப்பது, ஆண் வர்க்கத்துக்கே பாவ மன்னிப்பு கோரும் செயல் என்றுகூடப் பார்க்கலாம்.
வியாசரின் மகாபாரதத்தில் எத்தனையோ கதாபாத்திரங்கள். அவற்றில் அன்றைய ஆண்மையச் சமூகத்தில், ஆண்களின் ஆளுமையை மீறி நிற்கும் பெண் கதாபாத்திரங்கள் தீரத்துக்குப் பெயர் பெற்ற திரௌபதி போல், சித்திராங்கதை போல் வெகு சில கதாபாத்திரங்கள்தான்.
மகாபாரதத்தில், பெண்களின் மனக் குரல் கேட்டும், கேட்காததுபோல் நடந்துகொண்ட ஆண் கதாபாத்திரங்களைப் போல் இன்றைக்கும் நம்மிடையே ஆண்கள் பலரைப் பார்க்கலாம். மகாபாரதக் காலம், பெண்களை எப்படியெல்லாம் அடக்கி, ஒடுக்கி வைத்திருந்தது என்பதை துரை.நாகராஜன் தனது மூன்றாம் கண் கொண்டு பார்த்திருப்பது இந்த நூலின் தனிச் சிறப்பு. - சிவகுமார், நடிகர், ஓவியர்
கவனிக்கப்படாத காவியப் பூக்கள்
துரை நாகராஜன்
விலை: ரூ.200
தொடர்புக்கு: 74012 96562 / 74013 29402
ஆன்லைனில் வாங்க: store.hindutamil.in/publications