

திருச்சி சமயபுரம் எஸ்.ஆர்.வி மெட்ரிக் பள்ளியின் சார்பாக ஆண்டுதோறும் வழங்கப்பட்டுவரும் ‘அறிஞர் போற்றுதும் அறிஞர் போற்றுதும்’ விருது விழா இன்று (02.09.23) பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ளது.
வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவியல் அறிஞர் கு.வி.கிருஷ்ணமூர்த்தி, பேராசிரியர் க.பஞ்சாங்கம் ஆகியோருக்கும் எஸ்.ஆர்.வி. தமிழ் இலக்கிய விருது எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன், மொழிபெயர்ப்பாளர் ஜி.குப்புசாமி, கவிஞர் சுகிர்தராணி ஆகியோருக்கும் சமூக நோக்கு விருது வேளாண் அறிஞர் பாமயன், விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் ஆகியோருக்கும் படைப்பூக்க விருது எழுத்தாளர் பா.திருச்செந்தாழை, எழுத்தாளர் ஐ.கிருத்திகா, கவிஞர் ஆசை ஆகியோருக்கும் சிறார் இலக்கிய விருது எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கும் வழங்கப்படவுள்ளன.
சனாதன ஒழிப்பு மாநாடு: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ஒருங்கிணைக்கும் சனாதன ஒழிப்பு மாநாடு இன்று (02.09.23) சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடைபெறவுள்ளது. கி.வீரமணி, எஸ்.ஏ.பெருமாள், மாலம்மா, இராதிகா வெமுலா, நா.முத்துநிலவன், பிரளயன், சிகரம் ச.செந்தில்நாதன், உதயநிதி ஸ்டாலின், தொல்.திருமாவளவன், யுகபாரதி, மு.வீரபாண்டியன் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொள்கின்றனர்.