நூல் வரிசை

நூல் வரிசை
Updated on
2 min read

தினை அல்லது சஞ்சீவனி
இரா.முருகன்

எழுத்து பதிப்பகம்
விலை: ரூ.630
தொடர்புக்கு: 8925061999

இரா.முருகனின் முற்றிலும் கற்பனைமயமான நாவல் இது. கோகர் என்கிற மலையில் நிகழும் கதை, கற்பனைச் சிறகை விரித்துப் பறக்கிறது.

அம்பை சிகண்டி
செ.அருட்செல்வப் பேரரசன்

சுவாசம் பதிப்பகம்
விலை: ரூ.210
தொடர்புக்கு: 8148066645

மகாபாரதக் காவியத்தில் முக்கியமான கதாபாத்திரம் அம்பை. இந்தக் கதாபாத்திரத்தை வைத்து, பாரதக் கதையைப் பார்க்கும் நூல் இது.

தேமதுர தமிழ்
நவீன ஆத்திசூடி

விஷ்ணுதாசன்
புஸ்தகா வெளியீடு
விலை: ரூ.80
தொடர்புக்கு: 7418555884

ஔவையின் ஆத்திசூடிபோல் பாரதியாரும் ஒன்றை எழுதியிருக்கிறார். அது போன்ற புதிய ஆத்திசூடியை விஷ்ணுதாசன் இதில் எழுதியிருக்கிறார்.

கலிங்க மன்னர் இமயவர்மன்
பி.ஆர்.சுப்பிரமணியராஜா

கவிதா பப்ளிகேஷன்
விலை: ரூ.1,125
தொடர்புக்கு: 044 42161657

கலிங்க மன்னர் இமயவர்மனை நாயகனாகக் கொண்டு எழுதப்பட்ட சுவாராசியமான நூல். எளிய நடை, செறிவான விவரிப்புடன் கூடிய நல் வாசிப்பு தரும் நூல் இது.

ஹோ சி மின்
யெவ்கனி கொபலெவ் (தமிழில்: க.விஜயகுமார்)

தமிழோசை பதிப்பகம்
விலை: ரூ.450
தொடர்புக்கு: 9788459063

வடக்கு வியட்நாமின் பிரதமராக இருந்த ஹோ சி மின் என்கிற புரட்சிக்காரரின் வாழ்க்கைக் கதை இது. புரட்சி, போர், கம்யூனிச நாட்டை உருவாக்கியது எனப் பல அம்சங்களில் விரிகிறது நூல்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in