Published : 09 Dec 2017 10:06 AM
Last Updated : 09 Dec 2017 10:06 AM

பிறமொழி நூலறிமுகம்: அடிமைகளாய் நூறாண்டு…

முதல் பர்மா போரில் வெற்றி பெற்ற கிழக்கிந்திய கம்பெனிப் படையின் ஆளுகைக்குள் வந்த அசாம் பகுதியை வணிகரீதியாகச் சுரண்டுவதற்கான முதல் முயற்சிதான் தேயிலைத் தோட்டங்களின் உருவாக்கம். உள்ளூர் மக்களை அதில் ஈடுபடுத்த முடியாத ஐரோப்பிய முதலாளிகள், நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவிய பஞ்சம், வறட்சி ஆகிய நிலைமைகளைப் பயன்படுத்திக்கொண்டு முதலில் கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகம், பின்பு நேரடியாக ஆட்சிப் பொறுப்பேற்ற பிரிட்டிஷ் பேரரசின் உதவியுடன் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்குக் கூலித் தொழிலாளிகளை அணிதிரட்டிய வரலாற் றைக் கூறும் நூல் இது.

புதிய பருவநிலை, புதிய சூழல், கொத்தடிமைத்தனம் ஆகியவற்றில் உழன்று, உயிர் நீத்த தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளின் கண்ணீர்க் கதையோடு கூடவே, இந்த மண்ணின் வளங்களை ஒட்ட உறிஞ்சிய ஐரோப்பிய முதலாளிகளின் ஈவிரக்கமற்ற சுரண்டலை ஆதாரங்களோடு இது முன்வைக்கிறது. மேலும், அவர்களுக்குப் போட்டியாக உருவெடுத்த இந்திய முதலாளிகள் தங்கள் பங்குக்குச் சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் காணாத நிலையையும் இந்நூல் எடுத்துரைக்கிறது. பிரிட்டிஷ் பொருளாதாரத்துக்கும் தொழிற்புரட்சிக் கும் தேயிலை வர்த்தகம் கொடுத்த ஊக்கத்தையும் மூலதனத்தையும் இது புள்ளிவிவரங்களோடு எடுத்துரைக்கிறது.

ஒன் ஹண்ட்ரட் இயர்ஸ் ஆஃப் செர்விட்யூட்,

ராணா பி. பெஹல்,  விலை: ரூ.900, துளிகா புக்ஸ்,

புதுடெல்லி- 110 049.

- வீ.பா.கணேசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x