

சட்டப்பேரவையில் சைதை துரைசாமி
(தொகுதிகள், 1,2,3)
தொகுப்பு: கே.ஜீவபாரதி
மனித நேயம் வெளியீடு
விலை: ரூ.200
தொடர்புக்கு: 9840169739
முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமி, சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். சட்டமன்றவாதியாக இவர் ஆற்றிய பங்கை எடுத்துரைக்கும் நூல் இது.
ஏன், பெரியார் மதங்களின் விரோதி?
வெற்றிச்செல்வன்
கருஞ்சட்டைப் பதிப்பகம்
விலை: ரூ.150
தொடர்புக்கு: 044 24726408
மதங்களைப் பற்றிய பெரியாரின் பார்வையை இத்தொகுப்பின் முதல் கட்டுரை விவரிக்கிறது. ‘மதமும் மனித சமதர்மமும்’ என்கிற பெரியாரின் கட்டுரையும் இதில்
சேர்க்கப்பட்டுள்ளது.
அரசாட்சியில் மனசாட்சி
வெ.சுப்பிரமணியன்
(எழுத்து: கா.சு.வேலாயுதன்)
கதை வட்டம்
விலை: ரூ.360
தொடர்புக்கு: 9994498033
அரசுப் பணியாளர் சங்கத்தின் செயல்பாட்டாளரான வெ.சுப்பிரமணியனின் வாழ்க்கையைக் குறித்தான நூல் இது. களப் பணிகள், தனி வாழ்க்கை என ஒரு நாவல் தன்மையுடன் நூல் எழுதப்பட்டுள்ளது.
போர்வாள்
எஸ்.டி.சோமசுந்தரம்
அ.மறைமலையான்
போர்வாள் பதிப்பகம்
விலை: ரூ.1,200
தொடர்புக்கு: 9962200130
முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது அமைச்சரவையில் வருவாய்த் துறை அமைச்சராக அங்கம் வகித்த எஸ்.டி.சோமசுந்தரத்தின் வாழ்க்கை வரலாறு. அவரது அரசியல் வாழ்க்கை முழுமையாக இதில் விவரிக்கப்பட்டுள்ளது.
சிறுவர்களுக்கான இராமாயணம்
கீர்த்தி
அழகு பதிப்பகம்
விலை: 115
தொடர்புக்கு: 9444191256
சிறார்களுக்குப் புரியும் வகையில் எளிமையான முறையில் ராமாயணக் காவியத்தை நூலாசிரியர் எழுதியுள்ளார். ஒரு சாகசக் கதையைப் படிப்பதுபோல் சிறார்கள், இதைச் சுவாரசியமாகப் படிக்கலாம்.