நூல் நோக்கு: நூலிலிருந்து...

நூல் நோக்கு: நூலிலிருந்து...
Updated on
1 min read

டி.

எஸ்.சொக்கலிங்கம் ‘பேனா மன்னர்’ என்று அழைக்கப்பட்ட பத்திரிகையுலக முன்னோடி. தேசபக்தர். அவரது வாழ்க்கைக் குறிப்புகள், பத்திரிகை நிர்வாகத்துடனான பிணக்கு, பத்திரிகைகளின் வளர்ச்சி, அந்நிய மொழி வார்த்தைகளைத் தமிழாக்கம் செய்ய வேண்டிய அவசியம் ஆகியவற்றைப் பற்றி டி.எஸ்.சொக்கலிங்கம் எழுதிய கட்டுரைத் தொகுப்பின் மறுபிரசுரம் இந்த நூல்.

“பத்திரிகைகள் பொதுஜன சேவையையே முதன்மையாகக் கருதி நடக்க பத்திரிகையின் ஆசிரியருக்கு நிர்வாகத்தில் அதிகாரம் வேண்டும் அல்லது ஆசிரியர்களே பத்திரிகையின் சொந்தக்காரர்களாக இருக்க வேண்டும். ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் சேவையைப் பத்திரிகையாளர்களே செய்கிறார்கள். ஜனநாயகம்தான் ஜனங்களின் உரிமைகளுக்கு அஸ்திவாரம். ரேடியோக்களால் பத்திரிகைகளுக்குப் போட்டி. தாய் பாஷை பத்திரிகைகளுக்குத்தான் எதிர்காலம்.

தமிழ்ப் பத்திரிகைகளால் தான் இன்று தமிழில் ராஜீய பிரசங்கம் செய்பவர்கள் எளிதாகச் செய்ய முடிகிறது. பத்திரிகைகள் வராமல் இருந்தால் அவர்களுக்குப் பேசுவதே சிரமமாகியிருக்கும். பிரிட்டிஷ் காபினெட் நமக்கு சுயராஜ்யம் கொடுக்க வேண்டும் என்று சொல்லக்கூடத் தெரியாது. ‘பிரிட்டிஷ் காபினெட் நமக்கு செல்ஃப் கவர்ன்மென்ட் கிரான்ட் பண்ண வேண்டும்’ என்று பேசியிருப்பார்கள். பாடப் புத்தகங்களில் பத்திரிகைகளில் எழுதப்படுவதைப் போல, புரியும் வகையில் எளிமையாக இருக்க வேண்டும்.”

டி.எஸ். சொக்கலிங்கம் கட்டுரைகள்,

விலை ரூ.35,

முல்லை பதிப்பகம்,

சென்னை-40,

தொடர்புக்கு: 9840358301.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in