Published : 02 Dec 2017 10:43 AM
Last Updated : 02 Dec 2017 10:43 AM

நூல் நோக்கு: கையில் த்வைதம் வயிற்றில் அத்வைதம்

தெ

ன்னக ரயில்வேயில் வர்த்தகப் பிரிவில் தலைமை எழுத்தராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் சென்ன கேசவ பெருமாள். இந்து சமயம் குறித்து அவர் படித்த புத்தகங்களிலிருந்தும், கடந்த சில ஆண்டுகளில் வெளியான கட்டுரைகளிலிருந்தும் அவர் சேகரித்த குறிப்புகளின் பெருந்தொகுப்பு இது. அவர் சொந்த மாக வெளியிட்ட இந்தப் புத்தகத்தின் இரண்டாம் பதிப்பை நர்மதா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. இந்தத் தொகுப்பு, இந்து சமயத்தில் உள்ள அடிப்படையான கருத்துகளை, எளிமையாக எடுத்துரைக்கிறது.

ஷண் மதம் எனப்படும் ஆறு வகை வழிபாட்டு நெறிகளின் தத்துவ விளக்கங்களைச் சுவைபடச் சொல்கிறது. உதாரணத்துக்கு, ரமணர் தன்னைக் காண வந்த பக்தரிடம் சொன்ன ஒரு விளக்கம்: நீயும் உன் கையில் இருக்கும் மாம்பழமும் வேறு வேறு - அது துவைதம்; மாம்பழத்தைச் சாப்பிட்டால் விசிஷ்டாத்வைதம்; அது ஜீரணமாகிவிட்டால் அத்வைதம் - இரண்டும் ஒன்றான நிலை.

- புவி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x