Published : 16 Dec 2017 10:35 AM
Last Updated : 16 Dec 2017 10:35 AM

சிற்றிதழ் பார்வை: குறி

வி

ளம்பரங்களை முற்றாக நிராகரித்து, தீவிரப் படைப்பிலக்கிய முயற்சிகளையும் புதிய எழுத்தாளர்களையும் அடையாளப்படுத்த வேண்டுமென்கிற எண்ணத்தில் கடந்த 8 ஆண்டுகளாக வெளிவந்துகொண்டிருக்கிறது ‘குறி’ இதழ். முன்பே படைப்பு வெளியில் அறிமுகமான தேனி சீருடையான், சோ.சுப்புராஜ், வளவ துரையன், புலியூர் முருகேசன் போன்ற படைப்பாளர்களோடு, ஒவ்வொரு இதழிலும் ஓரிரு புதியவர்களின் படைப்புகளும் இடம்பெறுகின்றன. சமீபத்தில் வெளிவந்திருக்கும் இதழ்:19-ல் (அக்.நவ.டிச-2017) வெளியாகியிருக்கும் கே.ஜே.அசோக்குமாரின் ‘கனவு’ சிறுகதை, நனவிலி மனதின் கனவுப் பயணமாகத் தொடர்ந்து, வாழ்க்கைச் சிக்கலோடு பின்னி முடிகிறது. கிரிஷன் சந்தரின் உருது மொழிச் சிறுகதையை அந்நியத்தன்மையற்று தமிழில் மொழிபெயர்த்துள்ளார் இரா.கதைப்பித்தன். மாலதி மைத்ரியின் ‘சமையல் கரண்டி’, ‘அர்த்தநாரி’ என இரு கவிதைகளும் கவனிப்புக்குரியதாக உள்ளன. சிவ.விஜயபாரதி, ஸ்ரீதர் பாரதியின் கவிதைகளும் இடம்பெற்றுள்ளன. சாகித்ய அகாடமியின் ஏற்பாட்டில் களப்பணி ஆய்வாக மத்திய பிரதேசத்திலுள்ள நரசிங்பூர், லக்னடோன் ஆகிய ஊர்களுக்குச் சென்றுவந்த அனுபவங்களைச் சிறுசிறு குறிப்புகளாகத் தனது பயணக் கட்டுரையில் தொகுத்தெழுதியுள்ளார் பூர்ணா. அபர்ணா தேவி, ஜெ.செல்வராஜ் எழுதிவரும் தொடர் கட்டுரைகள் விவாதத்துக்கான புள்ளிகளை முன்வைத்துப் போகின்றன. கலைச்செல்வியின் ‘இரவு’, ஜி.கார்ல் மார்க்ஸின் ‘வருவதற்கு முன்பிருந்த வெயில்’ ஆகிய நூல்களைக் குறித்த மதிப்புரைகள் விரிவாகவே நூல்களை அறிமுகம் செய்து வைக்கின்றன. ‘அறம்’ திரைப்படம் குறித்த கட்டுரையொன்றும் நல்ல பதிவு.

- முருகு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x